AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பான் இந்திய மொழிகளில் நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

List of Pan-Indian films releasing in theaters tomorrow | தமிழ் சினிமாவில் ஜன நாயகன் படம் வெளியான காரணத்தால் மற்றப் படங்களின் வெளியீடு இந்த வாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பான் இந்திய மொழிகளில் நாளை வெளியாகும் படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

பான் இந்திய மொழிகளில் நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Jul 2026 16:23 PM IST

தி இந்தியா ஸ்டோரி படம்: பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்து உள்ள படம் தி இந்தியா ஸ்டோரி. கோர்ட் ரூம் ட்ராமாவாக உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகை காஜல் அகர்வால் உடன் இணைந்து நடிகர்கள் ஷ்ரேயாஸ் தல்படே, த்ரிஷா சர்தா, முரளி சர்மா, மனிஷ் வாத்வா, அதுல் திவாரி, கமலேஷ் சாவந்த் மற்றும் ஷாம் மஷில்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் சேத்தன் டிகே மற்றும் குழுவினர் இயக்கி உள்ளனர். இந்தி மொழியில் உருவாகி உள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் நாளை 24-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேரா யார் ஹூன் மெய்ன் படம்: இந்தி சினிமாவில் உருவாகி உள்ள படம் தேரா யார் ஹூன் மெய்ன். இந்தப் படத்தை இயக்குநர் மிலாப் மிலன் ஜவேரி எழுதி இயக்கி உள்ளார். காமெடி ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் அமன் இந்திர குமார், அகன்ஷா ஷர்மா, பரேஷ் ராவல், ஜானி லீவர், சுப்ரியா பில்கோன்கர், மிருணாள் குல்கர்னி, நேஹா கான், பூஜா கதுர்டே, ஆனந்த் ஆச்சார்யா மற்றும் தர்ஷன் ஜரிவாலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்த நிலையில் படம் நாளை 24-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… நேருக்கு நேர் முதல் கருப்பு படம் வரை… பர்த்டே பாய் சூர்யாவின் சினிமா பயணம் இதோ!

சென்னை லவ் ஸ்டோரி படம்: தெலுங்கு சினிமாவில் உருவாகி உள்ள இந்த சென்னை லவ் ஸ்டோரி படத்தை இயக்குநர் ரவி நம்புரி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் கிரண் அப்பாவாரம் நாயகனாக நடித்து உள்ள நிலையில் நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி படம் நாளை 24-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… அனிருத் முதல் மமிதா  பைஜூ வரை… ஜன நாயகன் படத்தின் FDFS-வை கண்டுகளித்த பிரபலங்கள்!

Follow Us