AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாங்களும் போட்டிக்கு வரலாமா? விஷாலின் மகுடம் படத்தின் ரிலீஸ் தேதி இதுவா – வைரலாகும் தகவல்

Actor Vishals Magudam movie release date viral on social media | தமிழ் சினிமாவில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி படங்கள் திரையரங்குகளில் வெளியிட வரிசையாக அறிவிக்கப்படும் நிலையில் விஷால் படமும் அதே தேதியில் வெளியிட திட்டமிடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

நாங்களும் போட்டிக்கு வரலாமா? விஷாலின் மகுடம் படத்தின் ரிலீஸ் தேதி இதுவா – வைரலாகும் தகவல்
மகுடம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Jul 2026 12:17 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவர் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் அதிக அளவில் ஆக்‌ஷன் படங்களில் நடித்ததால் ரசிகர்கள் இவரை ஒரு ஆக்‌ஷ்ன் நாயகனாகவே கருதி வருகின்றனர். தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் வெளியாகி வந்தது. அதனைத் தொடர்ந்து கதைகளுக்கும் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் நடிகர் விஷால் தேர்வு செய்து நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் நடிகராக வலம் வந்த விஷால் தற்போது புது அவதாரம் எடுத்து உள்ளார்.

அதன்படி நடிகர் விஷால் தொடர்ந்து நடிகராக நடித்து வந்த நிலையில் தற்போது இயக்குநராகவும் களம் இறங்கி உள்ளார். அதன்படி அவரது நடிப்பில் உருவாகி வரும் மகுடம் படத்தை அவரே இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் விஷால் உடன் இணைந்து நடிகர்கள் துஷாரா விஜயன் மற்றும் அஞ்சலி மற்றும் பலர் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மகுடம் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஆகஸ்ட் 14-ம் தேதி ரிலீஸை குறிவைக்கும் மகுடம் படம்?

இந்த நிலையில் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி நடிகர் விஷால் இயக்கி நாயகனாக நடித்து வரும் மகுடம் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகின்றது. முன்னதாக இந்த தேதியில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடிகர் கவின் நடிப்பில் உருவாகி உள்ள ஹாய் படமும் அதே தேதியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்தப் போட்டியில் விஷாலின் படமும் இணைய உள்ள செய்தி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த பாட்டி சொல்லைத் தட்டாதே படம் 38 ஆண்டுகளைக் கடந்தது!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஃபகத் பாசில் – பிரேம் குமார் படத்தின் கதை இப்படிதான் இருக்குமா? வைரலாகும் தகவல்

Follow Us