AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நோ ரஜினிகாந்த்… நோ சிம்பு… இயக்குநர் தேசிங்கு பெரியசாமி அடுத்ததாக இயக்கும் நடிகர் இவரா?

Director Desingh Periyasamy next movie update | தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் அப்டேட் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நோ ரஜினிகாந்த்… நோ சிம்பு… இயக்குநர் தேசிங்கு பெரியசாமி அடுத்ததாக இயக்கும் நடிகர் இவரா?
தேசிங் பெரியசாமிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Jul 2026 16:37 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படத்திலேயே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறுகின்றனர் இயக்குநர்கள் பலர். அந்தவகையில் தமிழ் சினிமாவில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம். இந்தப் படத்தை இயக்குநர் தேசிங் பெரியசாமி எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் மூலமாக அவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ரிது வர்மா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் தேசிங் பெரியசாமி நடிகர் ரஜினிகாந்த் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிலம்பரசனின் 48-வது படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது புதிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இயக்குநர் தேசிங்கு பெரியசாமி அடுத்ததாக இயக்கும் நடிகர் இவரா?

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்குப் பிறகு, தேசிங் பெரியசாமி அடுத்து ரஜினிகாந்தின் படத்தை இயக்கவுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து சி.டி.ஆர் உடனான ஒரு படத்தில் பணியாற்றவுள்ளதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், அவரது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், தேசிங் பெரியசாமி தனது அடுத்த படத்தில் மணிகண்டனை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இப்படம் 40 முதல் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read… Kajal Aggarwal: விவசாயத்தில் விஷம்.. காஜல் அகர்வாலின் தி இந்திய ஸ்டோரி படத்தின் ட்ரெய்லர் இதோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… அவர் செய்தது போல நான் எதுவும் செய்யமாட்டேன்.. முதல்வர் விஜயை மீண்டும் கிண்டல் செய்த மலையாள நடிகர்!

Follow Us