AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் ஜன நாயகன் பட டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்கும்? – வெளியானது அறிவிப்பு!

Jana Nayagan Tamil Nadu Ticket Booking: 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் படம்தான் ஜன நாயகன். இந்த படமானது 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில், உலகமெங்கும் வெளியாகிறது. அந்த வகையில் இப்படத்தின் தமிழக டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்கும் என பார்க்கலாம்.

தமிழகத்தில் ஜன நாயகன் பட டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்கும்? – வெளியானது அறிவிப்பு!
ஜன நாயகன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 19 Jul 2026 15:04 PM IST

கோலிவுட் சினிமாவில் இந்த 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது முதலமைச்சர் விஜய் (CM Vijay, சினிமாவில் நடித்திருந்த கடைசி திரைப்படமாகும். இப்படத்தை இயக்குநர் எச். வினோத் (H Vinoth) இயக்க, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் வெங்கட் கே நாராயணா (Venkat K Narayana) தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைத்து வந்தார். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலே வெளியாகவேண்டிய நிலையில், சென்சார் பிரச்சனையின் காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. து கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு சென்சார் கிடைத்து, தற்போது ரிலீசிற்கு தயார்க்கியுள்ளது.

அந்த வகையில் இப்படத்தின் டிக்கெட் புக்கிங் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: மண்டாடியும் வருவான்.. சூரியின் மண்டாடி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

ஜன நாயகன் திரைப்படத்தின் தமிழக டிக்கெட் புக்கிங் எப்போது:

இப்படத்தின் ரிலீஸ் தான் தமிழ் சினிமாவில் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று. இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தமிழகத்தில் ஏற்கனவே சில திரையரங்குகளில் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் இன்று 2026ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி இரவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் வெளியீட்டிற்கு சில தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது.

ஜன நாயகன் படத்தின்  குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

கர்நாடகா – கேரளாவில் டிக்கெட் முன்பதிவில் ஜன நாயகன் சாதனை:

ஜன நாயகன் திரைப்படத்தில் பிற மாநிலங்கள் டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற இடங்களில் தொடங்கிவிட்டது. கர்நாடகாவில் காலை 6 மணி காட்சிகள் மூலம் திரையிடப்படுகிறது. மேலும் கேரளாவில் காலை 8 மணி காட்சிகள் முதல் ஒளிபரப்பாகிறதாம்.

இதையும் படிங்க: இயக்குநராக எனது முதல் தேசிய விருது.. இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி – தனுஷ்!

கேரளாவில் தொடங்கிய சில மணி நேரங்களில் பல ஆயிரம் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். கேரளாவில் ரூ 1 கோடிக்கு மேலும், கர்நாடகாவில் ரூ 3 கோடிக்கும் மேல் டிக்கெட் முன்பதிவு வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us