ஜன நாயகன் படத்திற்கு புது ட்ரெய்லர் வருமா? வராதா? – வைரலாகும் தகவல்
Sources said no new trailer for Jana Nayagan movie | தமிழ் சினிமாவில் அடுத்ததாக மிகவும் பிரமாண்டமாக வெளியாக உள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக மீண்டும் ஒரு ட்ரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது தமிழக அரசியலில் தீவிரமாக பயணித்து வருகிறார். அதன்படி தமிழக சட்டமன்ற தேதலில் போட்டியிட்டு தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதலமைச்சராக போட்டி இடுவதற்கு முன்னதாக தனது நடிப்பில் இறுதியாக உருவாகும் படம் என்று ஜன நாயகன் படத்தை அறிவித்தார். இந்தப் படம் நடிகர் தளபதி விஜயின் நடிப்பில் உருவான 69-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு பிறகு இனி படங்களில் நடிக்கபோவதில்லை என்று மிகவும் உறுதியாக நடிகர் தளபதி விஜய் கூறியது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்து.
இந்தப் படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைக்க தொடர்ந்து தாமதாமாகிக்கொண்டே இருந்தது. தொடர்ந்து 7 மாத போராட்டத்திற்கு பிறகு ஜன நாயகன் படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்தது. அதே நேரத்தில் இந்தப் படத்தின் முழு காட்சிகளும் இணையத்தில் கசிந்து படக்குழுவினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.




ஜன நாயகன் படத்திற்கு புது ட்ரெய்லர் வருமா? வராதா?
இந்த நிலையில் தற்போது ஜன நாயகன் படத்திற்கு சமீபத்தில் ஏ சான்றிதழ் கிடைத்தது. தொடர்ந்து படம் வருகின்ற 23-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியிட வாய்ப்பு உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது. ஆனால் தற்போது வெளியான தகவலின்படி தற்போது புது ட்ரெய்லர் வெளியாக வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… அன்பே டயானா முதல் அருள்வான் வரை… நாளை தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#JanaNayagan: No new trailer cut will be released. The team is heading straight ➡️ for its worldwide theatrical release.
Wherever bookings have opened—from India to overseas territories the response has been RESOUNDING 🔥🔥🔥. The entire Indian cinema trade is shocked that a… pic.twitter.com/43spIzq8MT
— Movies Singapore (@MoviesSingapore) July 17, 2026
Also Read… Preity Mukhundan: என் வாழ்க்கை துணையிடம் அதை நிச்சயம் எதிர்பார்ப்பேன் – பிரீத்தி முகுந்தன்!