AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அன்பே டயானா முதல் அருள்வான் வரை… நாளை தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்

theatre release movies tomorrow in South Indian languages | தென்னிந்திய மொழிகளில் வாரம் வாரம் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் இந்த வாரம் வெளியாக உள்ள படங்களின் பட்டியல் குறித்து தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

அன்பே டயானா முதல் அருள்வான் வரை… நாளை தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
படங்கள்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Jul 2026 20:15 PM IST

அன்பே டயானா படம்: தமிழ் சினிமாவில் ஜமா என்ற படத்தை இயக்கியதன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் இயக்குநர் பாரி இளவழகன். இவர் ஜமா படத்தை இயக்கியது மட்டும் இன்றி அந்தப் படத்தில் அவரே நாயகனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படமான ஜமா படத்தில் அழிந்து வரும் கலைகளில் ஒன்றான தெருக்கூத்து குறித்து பேசிய இவர் இரண்டாவதாக தற்போது இயக்கி உள்ள அன்பே டயானா படத்தினை முழுக்க முழுக்க வித்யாசமாக எடுத்துள்ளார். இந்தப் படம் கமர்ஷியல் பாணியில் மிகவும் ஜாலியாக இருக்கும் என்பது அன்பே டயானா படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் போதே தெரிகிறது. இந்தப் படத்தில் இயக்குநர் பாரி இளவழகன் உடன் இணைந்து தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள பல நடிகர்கள் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் நாளை 17-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓ…! சுகுமாரி படம்: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் தற்போது உருவாகி உள்ள படம் ஓ…! சுகுமாரி. இயக்குநர் பரத் தர்ஷன் எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தில் நடிகர் திருவீர் நாயகனாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் படம் நாளை 17-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… அருண் பிரபு இயக்கும் தனது அடுத்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்கிறார் – வைரலாகும் தகவல்

அருள்வான் படம்: நடிகர் அருள் நிதி நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் அருள்வான். இயக்குநர் கணேஷ் விநாயகன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர் அருள் நிதி உடன் இணைந்து நடிகர்கள் ஆரவ், ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, காளி வெங்கட், VTV கணேஷ் மற்றும் ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் நாளை 17-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Jason Sanjay: நிச்சயம் நானும் அவர்களில் ஒருவனாக மாறுவேன் – ஜேசன் சஞ்சய்!

Follow Us