ராமாயணா பட டிரெய்லரைப் பார்த்து நான் மிகவும் பிரமித்துப்போனேன் – இயக்குநர் அட்லி
Director Atlee Praised Ramayana Movie Trailer | பாலிவுட் சினிமாவில் தற்போது அதிக பொருட் செலவில் உருவாகி வரும் படம் ராமாயணா. இந்தப் படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் பார்த்த இயக்குநர் அட்லி வெகுவாகப் பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அட்லீ குமார். இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை இயக்கி வந்தார். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ஹிட் அடித்து வந்த இயக்குநர் அட்லி குமார் தொடர்ந்து இந்தி சினிமாவில் கால் பதித்தார். அதன்படி இந்தி சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்த முதல் படத்திலேயே பாலிவுட்டின் பாட்ஷா என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கினார். இந்தி சினிமாவில் பல முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்து இருந்தாலும் இயக்குநர் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படம் தான் ஷாருக்கானுக்கு தேசிய விருதை முதன்முதலாக பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இயக்குநர் அட்லி ஷாருக்கான் படத்தை தொடர்ந்து டோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்க ஒப்பந்தம் ஆனார். மேலும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்து வரும் நிலையில் படத்திற்கு ராக்கா என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படம் அடுத்த 2027-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.




ராமாயணா பட டிரெய்லரைப் பார்த்து நான் மிகவும் பிரமித்துப்போனேன்:
இந்த நிலையில் பான் இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக வலம் வரும் இயக்குநர் அட்லி குமார் சமீபத்தில் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த எக்ஸ் தள பதிவில் அட்லி குமார் பேசியதாவது, ராமாயணம் ட்ரெய்லர் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது! நமித் மல்ஹோத்ரா அவர்களின் தொலைநோக்குப் பார்வையும், நிதேஷ் திவாரியின் அற்புதமான கைவண்ணமும் பிரமிக்க வைக்கின்றன. யாஷ் மிரட்டலான தோற்றத்தில் உள்ளார், ரன்பீர் கபூர் அசத்தலாக இருக்கிறார், சாய் பல்லவி தேவதை போல ஜொலிக்கிறார். ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமாகவும், புத்துணர்ச்சியூட்டும் வகையிலும், மாயாஜாலம் போலவும் அமைந்துள்ளது. ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வாழ்த்துகள். இது உண்மையிலேயே ஒரு காவியமாக அமையப்போகிறது.
Also Read… தமிழகத்தில் ஜன நாயகன் பட டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்கும்? – வெளியானது அறிவிப்பு!
இயக்குநர் அட்லி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Absolutely blown away by the #Ramayana trailer! What a vision by @NamitMalhotra sir and what incredible craft from @niteshtiwari22 sir.@TheNameIsYash bro looks unbelievably lethal, Ranbir Kapoor bro is stunning, and @Sai_Pallavi92 is ethereal. Every frame feels grand, fresh,…
— atlee (@Atlee_dir) July 20, 2026
Also Read… Sivakarthikeyan: தேசிய விருது வென்ற அமரன் படக்குழு.. வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!