படங்களில் அந்த உடை எனக்கு சௌகரியமாக இல்லை – நடிகை காஜல் அகர்வால்
Actress Kajal Aggarwal talks about wearing a bikini on screen | பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் திரையில் பிகினி அணிவது குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பான் இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகவர்வால். இவர் தனது சினிமா வாழ்க்கையை இந்தி சினிமாவில் தொடங்கி இருந்தாலும் தொடர்ந்து தெலுங்கு மொழியில் தனது நாயகி அறிமுகத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகமான நடிகை காஜல் அகவர் தொடர்ந்து தமிழ் மற்றும் இந்தி மொழிகளிலும் படங்களில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். அதிலும் குறிப்பாக தென்னிந்திய மொழிகளான தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் நடிகை காஜல் அகர்வால அதிக அளவில் நடித்துள்ளார். முன்னணி நாயகன்களுக்கு தொடர்ந்து நாயகியாக நடித்து வந்த நடிகை காஜல் அகர்வால் தற்போது கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் இந்தி மொழியில் வெளியாக உள்ள படம் தி இந்தியா ஸ்டோரி. இந்தப் படத்தை இயக்குநர் சேட்டன் டி.கே எழுதி இயக்கி உள்ளார். படத்தில் நடிகை காஜல் அகர்வால் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். கோர்ட் ரூம் ட்ராமாவாக உருவாகி உள்ள இந்த தி இந்தியா ஸ்டோரி படம் வருகின்ற 24-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகை காஜல் அகர்வால் ஈடுபட்டுள்ள நிலையில் அவரது பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
படங்களில் அந்த உடை எனக்கு சௌகரியமாக இல்லை:
நடிகை காஜல் அகர்வால் பேசியதாவது, பிகினி உடையில் நடிப்பது எனக்குச் சௌகரியமாக இருப்பதில்லை. இது முற்றிலும் ஒரு தனிப்பட்ட விஷயம் என்று நான் கருதுகிறேன். எனவே, திரையில் அத்தகைய தோற்றத்தில் நடிப்பதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. அதேபோல, படங்களில் மிக நெருக்கமான காட்சிகளில் நடிப்பதிலும் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. அந்த விஷயத்தில்தான் நான் எனக்கான தனிப்பட்ட எல்லையை வகுத்துக்கொண்டேன்.
ஒரு படத்தின் கதையோ அல்லது அதில் இடம்பெறும் குறிப்பிட்ட காட்சியோ நான் வகுத்துள்ள எல்லைகளை மீறும் பட்சத்தில், மன்னிக்கவும், என்னால் இதில் பங்கேற்க முடியாது’ என்று கண்ணியமாகத் தெரிவித்துவிட்டு அந்தப் படத்திலிருந்து விலகிவிடுவேன். படத்தின் பட்ஜெட் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சரி, அல்லது அந்த கதாபாத்திரம் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் சரி – அவை எதுவும் எனது முடிவை மாற்றுவதில்லை. திரைப்படத் துறையில் ஒவ்வொரு நடிகரும் தங்களுக்கான எல்லைகளைத் தாங்களே வகுத்துக்கொண்டு, அவற்றில் உறுதியாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… DQ41: துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டேவின் DQ41 பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? படக்குழு அறிவிப்பு!
இணையத்தில் வைரலாகும் காஜல் அகர்வால் பேச்சு:
“I’m Not Comfortable Wearing Bikinis on Screen” – #KajalAggarwal
“I’m not comfortable acting in bikini outfits. I believe it’s a completely personal matter, and I have no interest in portraying it on screen.
Likewise, I’ve never been comfortable doing overly intimate scenes… pic.twitter.com/1uASTGSOGO
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) July 9, 2026
Also Read… Atharvaa: எனக்கு அவர் எப்போதும் அண்ணாதான்.. முதல்வர் விஜயை நேரில் சந்தித்த அதர்வா!



