விஜய் சேதுபதியின் ட்ரெய்ன் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
Actor Vijay Sethupathis Train Movie Teaser Update | தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ட்ரெய்ன். இந்தப் படத்தின் டீசர் எப்போது வெளியாக உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. தொடர்ந்து சினிமவில் நடித்தால் நாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல் தொடர்ந்து பல கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இவர் எந்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்தாலும் ரசிகர்கள் அதனை தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வரிசையாக வெளியாகி வருகின்றது. அதன்படி இந்த 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் காந்தி டால்க்ஸ் என்ற படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது. அந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வருகின்றது.
அதன்படி தற்போது நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் பாக்கெட் நாவல் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் மணிரத்னம் மற்றும் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் முன்னதாக இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ட்ரெய்ன் படத்தின் அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




விஜய் சேதுபதியின் ட்ரெய்ன் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது?
இந்த ட்ரெய்ன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் படம் தொடர்பான அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ட்ரெய்ன் படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு வருகின்ற 12-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு மாலை வெளியாக உள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… அந்த இரண்டு விசயமும் சிவகார்த்திகேயனிடம் கற்றுக்கொண்டேன் – இயக்குநர் சிவக்குமார் முருகேசன்
விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Train – Teaser & Audio launch on July 12, 6:30pm at PVR Satyam Cinemas!@DirectorMysskin @shrutihaasan @nasser_kameela @ksravikumardir @ira_dayanand @itsNarain @preethy_karan @KalaiActor #YugiSethu @fowziafathima @editorsriwat #TapasNayak #StreetLight @vijaytelevision… pic.twitter.com/zE68IHFO6E
— VijaySethupathi (@VijaySethuOffl) July 9, 2026
Also Read… கட்டா குஸ்தி 2 படத்திலிருந்து வெளியானது சில் மம்மி பாடல் வீடியோ