அந்த இரண்டு விசயமும் சிவகார்த்திகேயனிடம் கற்றுக்கொண்டேன் – இயக்குநர் சிவக்குமார் முருகேசன்
Director Sivakumar Murugesan praised Sivakarthikeyan | தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இயக்குநராக உள்ள இயக்குநர் சிவக்குமார் முருகேசன் நேற்று தாய் கிழவி படத்தின் வெற்றி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டிலும் தொடர்ந்து பல அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வரிசையில் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான படம் தாய் கிழவி. இந்தப் படத்தை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இவர் இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாய் கிழவி படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடெக்ஷன் சார்பாக தயாரித்து இருந்தார்.
இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் தாய் கிழவியாக நடித்து மக்களை பிரமிக்க வைத்துள்ளார். அவரது கதாப்பாத்திரம் வாழ்க்கையில் பெண்கள் எவ்வளவு சிக்கனமாகவும் விவரமாகவும் பிழைக்க வேண்டும் என்பதை மிகவும் அழகாக காட்டும். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டும் இன்றி ஓடிடியில் வெளியான பிறகும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் 100 நாட்களை கடந்ததை படக்குழு நேற்று கொண்டாடியது. அந்த விழாவில் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் அனைவரும் கலந்துகொண்டு பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




அந்த இரண்டு விசயமும் சிவகார்த்திகேயனிடம் கற்றுக்கொண்டேன்:
அந்த வகையில் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் பேசியபோது சிவகார்த்திகேயன் குறித்து பேசியது கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதில் அவர் கூறியதாவது, என் வாழ்க்கையில் நான் இரண்டு விதிகளைப் பின்பற்றுகிறேன்: என் உணவுக்கும் என் வேலைக்கும் நான் உண்மையாக இருக்கிறேன். இவ்விரண்டையும் எனக்கு அளிப்பவர்கள் என் விசுவாசத்திற்குத் தகுதியானவர்கள். சிவகார்த்திகேயன் காரணமாகவே நான் இந்தக் கொள்கையைப் பின்பற்றுகிறேன் என்று தெரிவித்து இருந்தார்.
மேலும் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சிவக்குமார் முருகேசனுக்கு கார் பரிசளித்துள்ளார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் சிவக்குமார் முருகேசன் பேச்சு:
Dir #SivakumarMurugesan about #SivaKartikeyan ❤️
– In my life, I follow two rules, I stay loyal to my food, and I stay loyal to my work.
– Whoever gives me both deserves my loyalty. I follow this belief because of Sivakarthikeyan.#ThaaiKizhavi100 | #Seyon…
— Movie Tamil (@_MovieTamil) July 7, 2026
Also Read… அஞ்சான் படத்தைக் குறை கூறவே பலர் காத்திருந்தனர் – இயக்குநர் லிங்குசாமி