AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரயிலை பாதி வழியில் நிறுத்திவிட்டு சமோசா வாங்க சென்ற லோகோ பைலட்.. பேசுபொருளாக மாறிய வீடியோ!

Loco Pilot Stopped Train In Mid Way | மத்திய பிரதேசத்தில் ரயிலின் லோகோ பைலட் ஒருவர், சமோசா வாங்குவதற்காக ரயிலை பாதி வழியில் நிறுத்திவிட்டு சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரயிலை பாதி வழியில் நிறுத்திவிட்டு சமோசா வாங்க சென்ற லோகோ பைலட்.. பேசுபொருளாக மாறிய வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Jul 2026 12:59 PM IST

இந்தூர், ஜூலை 08 : மத்திய பிரதேசத்தில் (MP – Madhya Pradesh) ரயிலின் லோகோ பைலட் ஒருவர் சமோசா வாங்குவதற்காக ரயிலை பாதி வழியில் நிறுத்திவிட்டு சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் காத்துக்கொண்டு இருக்க அவர் மிகவும் சாவகாசமாக சமோசாவை வாங்கிகொண்டு செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரயிலை நிறுத்திவிட்டு சமோசா வாங்கச் சென்ற லோகோபைலட்

ரயில் போக்குவரத்து மற்ற சாலை போக்குவரத்துகளை விட சற்று வித்தியாசமானது. மற்ற போக்குவரத்தில், அதாவது பேருந்து, கார், பைக் உள்ளிட்டவற்றை எங்கு வேண்டுமானாலும் அவசரத்திற்கோ அல்லது ஏதேனும் தேவைகளுக்கோ நிறுத்திக்கொள்ளலாம். ஆனால், ரயில் போக்குவரத்து அப்படி அல்ல. ஒரு நிறுத்தத்தில் கூட இத்தனை நிமிடங்கள் தான் நிறுத்த வேண்டும் என கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால், ரயிலின் லோகோ பைலட் ஒருவர் ரயிலை நடுவழியில் நிறுத்திவிட்டு சமோசா வாங்க சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : இந்தோனேசியா டூ நியூசிலாந்து.. பிரதமர் மோடியின் 6 நாட்கள் சுற்றுப்பயணம்.. முக்கிய ஆலோசனைகள் பிளான்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ரயில் ஒன்று பாதி வழியில் நின்றுக்கொண்டு இருக்கிறது. ரயிலில் உள்ள பயணிகள், கீழே இறங்கி காத்துக்கொண்டு இருக்கும் நிலையில் அந்த ரயிலின் லோகோ பைலட் சாவகாசமாக கீழே இறங்கிச் சென்று சமோசா வாங்கிக்கொண்டு மீண்டும் ரயிலுக்கு செல்கிறார்.

இதையும் படிங்க : 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 4 இளைஞர்கள்.. ஒருவரை அடித்தே கொன்ற ஊர் மக்கள்!

லோகோ பைலட்டின் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us