12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 4 இளைஞர்கள்.. ஒருவரை அடித்தே கொன்ற ஊர் மக்கள்!
Young Man Beaten Up To Death By A Villagers | மேற்கு வங்கத்தில் 12 வயது சிறுமி நான்கு இளைஞர்களால் கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சம்மந்தப்பட்ட ஒரு இளைஞரை அந்த கிராம மக்கள் அடித்தே கொலை செய்துள்ளனர்.
கொல்கத்தா, ஜூலை 06 : மேற்கு வங்கத்தில் (West Bengal) 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய இளைஞரை அந்த பகுதி மக்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் இந்த கொடூர கொலை சம்பவத்தில் நான்கு பேர் ஈடுபட்ட நிலையில், அதில் ஒருவரை அந்த பகுதி மக்கள் அடித்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி
மேற்கு வங்க மாநிலம், தெற்கு பர்கானஸ் மாவட்டம், சூர்யபூர் கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி, ஜூலை 04, 2026 அன்று தனது தோழியின் பிறந்த நாளுக்காக பரிசு வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது, சிறுமியை பின்தொடர்ந்து சென்ற 4 பேர், அவரை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து மூட்டையில் கட்டி குளத்திற்கு அருகே வீசியுள்ளனர்.
இதையும் படிங்க : எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தினால் மைலேஜ் குறையுமா? உண்மை என்ன? மத்திய அமைச்சர் சொன்ன விளக்கம்
4 இளைஞர்களில் ஒருவர் அடித்து கொலை
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அவரின் குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த 4 பேரில் ஒருவரை கண்டறிந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : ராஜஸ்தான், குஜராத்தில் ரூ.1.13 லட்சம் கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் குடும்பத்தார், கொடூர செயலில் ஈடுபட்ட அந்த இளைஞரை அடித்தே கொலை செய்துள்ளனர். பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், சிறுமியின் கொலை வழக்கில் ஈடுபட்ட மூவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.