Viral Video : ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் சாலையில் வீலிங் செய்த இளைஞர்கள்.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!
Young Men Block Ambulance By Doing Bike Stunt In Bengaluru | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், இளைஞர்கள் சிலர் வீலிங் செய்தபடி ஆம்புலஸ் வாகனத்தை வழிமறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்களில் சில பாராட்டுக்களையும், சில வீடியோக்கள் விமர்சனங்களையும் பெறும். அந்த வகையில், இளைஞர்கள் சிலர் பைக் வீலிங் செய்வது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சாலையில் பைக் வீலிங் செய்த இளைஞர்கள்
இந்திய சாலைகளில் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் அதற்கு குறிப்பிட்ட சில விதிகளை பின்பற்ற வேண்டும். ஒருவேளை விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டினால் சிறை தண்டனை வரை பெற வாய்ப்புள்ளது. இருப்பினும் இளைஞர்கள் சிலர் பைக் வீலிங், வேகமாக வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட சாகசங்களை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், பெங்களூரு சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் வீலிங் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : 5.50 ஆண்டுகள் விசுவாசம்.. நொடி பொழுதில் பணி நீக்கம்.. டெல்லி பெண் வெளியிட்ட வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
A group of bikers in Bengaluru performed stunts on the streets, obstructing an ambulance carrying a patient in need of urgent medical care. The incident reportedly occurred around 2.30 am on the Goraguntepalya–Yeshwanthpur stretch, where five to six bikers were seen riding ahead… pic.twitter.com/ZLYyEqDTYW
— Vani Mehrotra (@vani_mehrotra) July 6, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இளைஞர்கள் சிலர் பெங்களூரு சாலையில் வீலிங் செய்கின்றனர். அவர்களை பின்தொடர்ந்தபடி, ஒலி எழுப்பியபடி ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல அவர்கள் அதனை கண்டுக்கொள்ளாமல், ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடாம சென்றுக்கொண்டு இருக்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : இந்திய கடைக்காரரின் நேர்மையை பாராட்டிய போலந்து பெண்.. வைரல் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அந்த இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.