AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : 5.50 ஆண்டுகள் விசுவாசம்.. நொடி பொழுதில் பணி நீக்கம்.. டெல்லி பெண் வெளியிட்ட வீடியோ!

Delhi Woman Job Fire Video Goes Viral | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், 5.50 ஆண்டுகள் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து தான் பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து டெல்லி பெண் ஒருவர் வீடியோ பதிவிட்டுள்ளார்.

Viral Video : 5.50 ஆண்டுகள் விசுவாசம்.. நொடி பொழுதில் பணி நீக்கம்.. டெல்லி பெண் வெளியிட்ட வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Jul 2026 17:09 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். பொதுவெளியில் நடைபெறும் சம்பவங்களை சிலர் வீடியோ பதிவு செய்து வெளியிடுவர், சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள், அல்லது சிலர் தாங்களே பதிவு செய்து வெளியிடும் வீடியோ என பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தான் விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்த பெண் ஒருவர், தனக்கு திடீரென வேலை போய்விட்டது குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோப்வில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திடீரென பணி நீக்கம் – பெண் வெளியிட்ட வீடியோ

செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் உள்ளிட்டவற்றின் காரணமாக பலரும் தங்களது பணியை இழந்து வருகின்றனர். மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் பணியாளர்களை வேலை நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், விப்ரோவில் பணியாற்றிக்கொண்டு இருந்த தன்னை திடீரென பணி நீக்கம் செய்துவிட்டனர் என்று டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : வெறும் 3 மணி நேரத்தில் ரூ.2,350 சம்பாதித்த இளைஞர்.. என்ன செய்தார் தெரியுமா?.. வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் பேசும் இளம் பெண், நான் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து என்னை அழைத்த மனிதவள மேம்பாட்டாளர், நான் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறினார். நான் அந்த நிறுவனத்தில் 5.50 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அடுத்து என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. இது கடவுளின் செயலாக கூட இருக்கலாம் என்று அந்த பெண் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : எறும்பை ஆட்டிப்படைக்கும் பூஞ்சைக்கு ஆப்பு வைத்த புதிய பூஞ்சை!

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவின் கீழ் பலரும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us