AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : தாயின் ஐபோனை குளத்தில் வீசிய குழந்தை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Baby Threw Mother's iPhone In Lake | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், குழந்தை ஒன்று தனது தாயின் ஐபோனை குளத்தில் வீசும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : தாயின் ஐபோனை குளத்தில் வீசிய குழந்தை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 20 Jun 2026 17:56 PM IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்ய மற்றும் வித்தியாசமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அவ்வாறு, இணையத்தில் வைரலாகும் சில வீடியோக்கள் பேசுபொருளாகவும் மாறும். அந்த வகையில், குழந்தை ஒருவர் தனது தாயின் ஐபோனை தண்ணீரில் வீசும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தாயின் ஐபோனை குளத்தில் வீசிய குழந்தை

குழந்தைகளுக்கு சரி, தவறு என எதுவும் தெரியாது. அவர்கள் தங்கள் யோசிப்பதை அப்படியே செய்து விடுவர். இவ்வாறு குழந்தைகள் செய்யும் குறும்புதனமான செயல்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தான் சிறுவன் ஒருவர் தனது தாயின் ஐபோனை குளத்தில் வீசும் வீடியோ ஒன்று வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : கேரளா அன்னாசி தோட்டத்தில் மறைந்திருந்த ராட்ச ராஜ நாகம்.. லாவகமாக பிடித்த வனத்துறையினர்.. ஷாக் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், படகில் சவாரி செய்யும் பெண் ஒரிவர் மடியில் தனது குழந்தையை வைத்துள்ளார். அப்போது அவர் தனது ஐபோனை விளையாடுவதற்காக குழந்தையின் கையில் கொடுக்கிறார். உடனே அந்த குழந்தை, ஐபோனை குளத்தில் வீசுகிறது. அதனை கண்டு அந்த பெண் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : எச்சில் துப்ப வேண்டாம் என கூறியதால் ஆத்திரம்.. முதியவரை சரமாரியாக தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்!

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us