AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : ஹோலி பண்டிகையின்போது பாலியல் சீண்டலுக்கு உள்ளான கொரியா கர்ப்பிணி பெண்?.. விளக்கம் அளித்த நபர்!

Kore Pregnant Woman Abused During Holy Festival In India | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஹோலி பண்டிகையின்போது பாலியல் சீண்டலுக்கு உள்ளான கொரியா கர்ப்பிணி பெண் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : ஹோலி பண்டிகையின்போது பாலியல் சீண்டலுக்கு உள்ளான கொரியா கர்ப்பிணி பெண்?.. விளக்கம் அளித்த நபர்!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 07 Jun 2026 22:41 PM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகும். அவற்றில் சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில வீடியோக்கள் கோபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், கொரியாவை சேர்ந்த நபர் ஒருவர், கர்ப்பிணியை போல வேடம் அணிந்து ஹோலி பண்டிகையில் கலந்துக்கொண்டபோது பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பான மற்றொரு வீடியோவை அவர் தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில், கொரியா நபர் பகிர்ந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஹோலி பண்டிகையின்போது பாலியல் சீண்டலுக்கு உள்ளான கொரியா கர்ப்பிணி பெண்?

சில நாட்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது, இந்தியாவில் நடைபெற்ற ஹோலி பண்டிகையில் கொரியா கர்ப்பிணி பெண் ஒருவர் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக அந்த வீடியோ கூறியது. அதன்பிறகு அது ஒரு பெண் இல்லை என்றும், கொரியாவை சேர்ந்த ஆண் ஒருவர் கர்ப்பிணி பெண் போல வேடம் அணிந்து ஹோலி பண்டிகையில் பங்கேற்றபோது அந்த சம்பவம் நடைபெற்றதாக ஒரு வீடியோ வெளியானது. இந்த நிலையில், அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள கொரியாவை சேர்ந்த நபர் அந்த இரண்டு வீடியோக்களும் தவறாக பரப்பப்படுவதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : ஹரியானாவை கலக்கும் ஏசி ஆட்டோ.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

அந்த வீடியோவில், கர்ப்பிணி பெண் வேடத்தில் இருப்பது வங்கதேசத்தில் பதிவு செய்யப்பட்டதுன் என்றும், ஹோலி பண்டிகை இந்தியாவில் எடுத்தது என்றும் இந்த இரண்டு வீடியோக்களை இணைத்து சமூக வலைத்தளங்களில் தவறாக பயன்படுத்துவதாகவும், ஹோலி பண்டிகையில் தான் பெண் வேடம் அணிந்து செல்லவில்லை என்றும், தனக்கு தலையில் அதிக முடி நீளமாக இருப்பதன் காரணமாக தன்னை பெண்ணாக கருதியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Follow Us