Viral Video : ஹரியானாவை கலக்கும் ஏசி ஆட்டோ.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
AC Auto Spotted In Roads of Haryana | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஹரியான சாலையில் சுற்றித் திரியும் ஏசி ஆட்டோவின் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக்க வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களின் உதவியால் நம்மை சுற்றி நடைபெறும் சில சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகி வைரலாகும். இணையத்தில் பல்வேறு வீடியோக்கள் வெளியிடப்பட்டாலும் வியக்கத்தக்க மற்றும் வித்தியாசமான வீடியோக்கள் இணையத்தில் பேசுபொருளாக மாறும். அந்த வகையில், ஹரியானாவில் (Haryana) ஏசி பொருத்தப்பட்ட ஆட்டோ தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
குர்கானில் ஏசி ஆட்டோ – இணையத்தை வியப்புக்குள்ளாக்கிய வீடியோ
இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பகல் வேலையில் வெளியே செல்ல முடியாத சூழல் உள்ளது. பேருந்து, ஆட்டோ என எதில் பயணித்தாலும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் தான், ஹரியானாவில் ஒரு ஆட்டோவில் ஏசி பொருத்தப்பட்டு இருப்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : அசாமில் காணப்பட்ட வெள்ளை நிற மான்.. இணையத்தை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
Gurgoan सच मे नए ज़माने मे जी रहा है, ऑटो AC शुरू हो गए Gurgoan मे pic.twitter.com/Sz6UErwoQq
— chandresh Gupta (@chandresh1912) June 1, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சாலையில் நீல நிற ஆட்டோ ஒன்று ஓடுகிறது. அந்த ஆட்டோ மற்ற ஆட்டோக்களை போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக உள்ளது. மூடப்பட்ட கதவுகள், ஜன்னல் அதில் உள்ளன. அந்த ஆட்டோவில் ஏசி பொருத்தப்பட்டுள்ளதன் காரணமாக அது அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நிலவும் கோடை வெயிலை சமாளிக்க ஆட்டோவின் உரிமையாளர் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : ரயிலில் விற்பனை செய்ய இருந்த சமோசாக்களின் மீது கால் வைத்திருந்த வியாபாரி.. இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ!
தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.