AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : வியட்நாமில் நிறவெறிக்கு உள்ளான இந்தியர்.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!

Indian Man Faced Racism In Vietnam Shop | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இந்தியர் ஒருவர் வியட்நாமில் உள்ள கடையில் நிறவெறிக்கு உள்ளானது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : வியட்நாமில் நிறவெறிக்கு உள்ளான இந்தியர்.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 May 2026 00:04 AM IST

சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அவற்றில் சில சமூக குற்றங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக இருக்கும். அந்த வகையில், வியட்நாமில் (Vietnam) இந்தியர் (Indian) ஒருவருக்கு நிற வெறி காரணமாக கடையில் பணியாற்றும் ஊழியர் பொருட்களை வழங்காதது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிற வெறி – வியட்நாமில் இந்தியருக்கு நடந்த அநீதி

இந்தியாவில் எவ்வாறு சாதி ரீதியான பாகுபாடுகள் அதிகம் உள்ளதோ அதேபோல உலக நாடுகளில் நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு பார்க்கும் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிற வெறிக்கு பலியான உயிர்களும் உள்ளன. இந்த நிலையில், வியட்நாமில் இந்தியர் ஒருவர் நிற வெறி பாகுபாடுக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

இதையும் படிங்க : Viral Video : கடையை தேடு வரும் மாடு.. தினந்தோறும் தோசை சுட்டு கொடுக்கும் உரிமையாளர்.. இணையத்தை கவர்ந்த வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இந்தியர் ஒருவர் வியட்நாமில் உள்ள ஒரு கடைக்கு சென்று சில பொருட்களை வாங்கியுள்ளார். ஆனால், அந்த கடையில் இருந்த நபர் இவரின் பொருட்களுக்கு பில் போடாமல் இருந்துள்ளார். இதுவே வெள்ளைக்காரர் ஒருவர் அதே பொருட்களை கொண்டு வந்து கொடுத்தபோது பில் போட்டுள்ளார். நிற வெறி காரணமாக தனக்கு அவர் பில் போடவில்லை என்பதை தெரிந்துக்கொண்ட அந்த நபர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Follow Us