AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

போலி புத்தக ஊழல்.. அரசியல், அறிவு பலம் கொண்டவர்களின் கூட்டுச் சதி! அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசம்!

Minister Rajmohan: தமிழகம் முழுவதும் அகல் விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் அடையாளம் காணப்பட்டு தனியாகப் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். திருச்சியில் திறக்கப்பட உள்ள காமராஜர் நூலகத்திற்காக அந்தப் பதிப்பகத்திலிருந்து வாங்கத் திட்டமிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் புதிதாகக் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்ட புத்தகங்களின் கொள்முதலும் ரத்து செய்யப்படும் என்றார்.

போலி புத்தக ஊழல்.. அரசியல், அறிவு பலம் கொண்டவர்களின் கூட்டுச் சதி! அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசம்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Nov 2026 22:10 PM IST

நவம்பர் 9, 2026: சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு, போலி புத்தகக் கொள்முதல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, நூலகங்களில் நடைபெற்றுள்ள போலி புத்தகக் கொள்முதல் முறைகேடு சர்வதேச அளவில் தமிழகத்திற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டினார். பொருளாதார நிபுணர் ஜீன் ட்ரெஸ் (Jean Drèze), தான் எழுதாத புத்தகம் ஒன்று தனது பெயரில் வெளியிடப்பட்டு 2023ஆம் ஆண்டு கலைஞர் நூலகத்தில் வாங்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

பல ஆண்டுகளாக தொடரும் போலி நூல் புத்தக ஊழல்

மேலும், அகல் விளக்கு பதிப்பகத்திலிருந்து மட்டும் 2025ஆம் ஆண்டு கன்னிமாரா நூலகத்திற்கு 523 புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். நிவேதா பால்ராஜ், நிவேதா மோகன் உள்ளிட்ட பெயர்களில் பல்வேறு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்களைப் பயன்படுத்தி போலி புத்தகங்கள் தயாரித்து நூலகங்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

விஜய் பாலு, விஜய் ஆதித்தன் உள்ளிட்ட பெயர்களிலும் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

புத்தகக் கொள்முதல் ரத்து – லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

தமிழகம் முழுவதும் அகல் விளக்கு பதிப்பகத்தின் புத்தகங்கள் அடையாளம் காணப்பட்டு தனியாகப் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். திருச்சியில் திறக்கப்பட உள்ள காமராஜர் நூலகத்திற்காக அந்தப் பதிப்பகத்திலிருந்து வாங்கத் திட்டமிடப்பட்ட புத்தகங்கள் மற்றும் புதிதாகக் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்ட புத்தகங்களின் கொள்முதலும் ரத்து செய்யப்படும் என்றார்.

மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசெஜ்? பாதுகாப்புக்காக தனி காவலர் நியமனம்.. விஜய் ஆட்சியை கிழித்து தொங்கவிட்ட கனிமொழி!

இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியுள்ளதாகவும், போலி எழுத்தாளர்களின் பெயர்களில் புத்தகங்களை வெளியிட்ட பதிப்பாளர்களிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

அரசியல் பின்புலம் கொண்டவர்களின் சதி!

மேலும் பேசிய அமைச்சர், “அரசியல் பலம், அரசியல் பின்புலம் மற்றும் அறிவு பலம் கொண்டவர்களின் கூட்டுச் சதியாக இது உள்ளது. அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகளின் துணையின்றி இத்தகைய முறைகேடுகளைச் செய்திருக்க முடியாது. பழைய புத்தகங்களைப் புதிய புத்தகங்களாகக் கணக்கிட்டு வாங்கியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

பெரியார் பெயரில் நடைபெற்ற இந்த ஊழலை மன்னிக்க முடியாது. எங்கள் மீது பழிபோட்டு உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க நினைத்தால் சட்டம் அவர்களுக்கு வழிவிடாது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. நூலகத்துறையில் முழுமையான வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்படும். தேவைப்பட்டால் தனிக்குழு அமைத்தும் விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் வேகமாகவும் நேர்மையாகவும் விசாரணை நடத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.

Follow Us