AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : கடையை தேடு வரும் மாடு.. தினந்தோறும் தோசை சுட்டு கொடுக்கும் உரிமையாளர்.. இணையத்தை கவர்ந்த வீடியோ!

Roadside Vendor Gives Dosa For Cow Everyday | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், சாலையோர் வியாபாரி ஒருவர் தனது கடைக்கு வரும் மாட்டுக்கு தினமும் தோசை சுட்டு கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : கடையை தேடு வரும் மாடு.. தினந்தோறும் தோசை சுட்டு கொடுக்கும் உரிமையாளர்.. இணையத்தை கவர்ந்த வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 20 May 2026 21:20 PM IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். இதில் பல விதமான வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்களும் உலகிற்கு தெரிய வரும். அந்த வகையில், மாடு ஒன்றிற்கு சாலையோர வியாபாரி தோசை ஊட்டி விடும் வீடியோ இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாட்டிற்கு தோசை ஊட்டி விடும் சாலையோர வியாபாரி

உலகில் பல வித்தியாசமான மற்றும் உண்ணதமான மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் செய்யும் செயல்கள் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தான், தனது கடையை தேடி வரும் மாடு ஒன்றிற்கு கடையின் உரிமையாளர் தினமும் தோசை சுட்டு கொடுத்து வருகிறார். அது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : பச்சை ரசாயனம் பூசப்பட்ட வெள்ளரிக்காய்.. இணையத்தில் வைரலாகு அதிர்ச்சி வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சாலையோர உணவகம் ஒன்றை தேடி மாடு ஒன்று வருகிறது. அந்த கடையின் உரிமையாளர் தோசை ஊற்றிக்கொண்டு இருக்க, அந்த மாடு அமைதியாக காத்துக்கொண்டு இருக்கிறது. அந்த உரிமையாளர் இரண்டு தோசைகளை சுட்டு எடுத்துக்கொண்டு அந்த மாட்டின் அருகே சென்று கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விடுகிறார். அந்த மாடு தோசைகளை அழகாக சாப்பிடுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : கத்தி குத்தில் இருந்து பெண்ணை காப்பாற்றிய இளைஞர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த கடையை தேடி நாள்தோறும் அந்த மாடு வருவதாக கூறப்படும் நிலையில், தினமும் தவறாமல் அந்த மாட்டுக்கு உணவளிக்கும் அந்த கடையின் உரிமையாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow Us