Viral Video : விவசாயம் செய்யும் மனித ரோபோட்.. இணையத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய வீடியோ!
Humanoid Robot Hoeing Farm | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், மனித ரோபோட் ஒன்று விவசாய நிலத்தில் உருளை கிழங்குகளை தோண்டி எடுப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்களில் சில ஆச்சர்யத்தையும், சில வீடியோக்கள் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக இருக்கும். அந்த வகையில், இணையத்தில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று காண்போரை ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது மனித வடிவிலான ரோபோட் (Humanoid Robot) ஒன்று விவசாயம் செய்வது தொடர்பான வீடியோ தான் அது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விவசாயம் செய்யும் மனித ரோபோட்
உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக வேமாக முன்னேறிக்கொண்டே செல்கிறது. மனித வடிவிலான ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு அம்சம் என வியக்க வைக்கும் பல்வேறு படைப்புகள் தற்போது உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், மனித ரோபோக்கள் தொடர்பான வீடியோக்கள் சில அவ்வப்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தான் விவசாயம் செய்யும் ரோபோவின் வீடியோ வெளியாகி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : லண்டனில் முதல் முறையாக திறக்கப்பட்ட ஹல்திரம்ஸ் கடை.. கூட்டம் கூட்டமாக குவிந்த இந்தியர்கள்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
😆 you jest, but in partnership with specialised robots & advanced AI/software, humanoid droids, once perfected, will be able to conduct agricultural work far better than humans ever could…👇🏼👇🏼 https://t.co/syO8E8T2oH
— Jim de’Griz (@jimdeGrizzle) July 21, 2026
உலக அளவில் சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மனித ரோபோக்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வரும். ஆனால், தற்போது மனித ரோபோ விவசாயம் செய்வது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மனித ரோபோ ஒன்று விவசாய நிலத்தில் உருளை கிழங்குகளை வெட்டி எடுத்துக்கொண்டு இருக்கிறது.
இதையும் படிங்க : Viral Video : முதியவரை முட்டி தூக்கி வீசிய 900 கிலோ எடை கொண்ட எறுமை மாடு.. பரபரப்பு வீடியோ!
அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் , விவசாயம் மட்டும் தான் மனிதர்களுக்கான தொழிலாக இருக்கும் என கூறப்பட்டது. தற்போது விவசாயத்திலும் மனித ரோபோக்கள் நுழைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.