AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : முதியவரை முட்டி தூக்கி வீசிய 900 கிலோ எடை கொண்ட எறுமை மாடு.. பரபரப்பு வீடியோ!

900 KG Bison Tossing 65 Year Old Man | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், அமெரிக்காவில் உள்ள தேசிய பூங்காவில் 65 வயது முதியவரை எறுமை மாடு தூக்கி வீசும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : முதியவரை முட்டி தூக்கி வீசிய 900 கிலோ எடை கொண்ட எறுமை மாடு.. பரபரப்பு வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 15 Jul 2026 14:52 PM IST

சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சில சுவாரஸ்யமான மற்றும் அசாத்தியமான சம்பவங்கள் தொடர்பான வீடியோகள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், முதியவர் ஒருவரை காட்டு எறுமை ஒன்று 8 அடி தூரத்திற்கு தூக்கி வீசும் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

முதியவரை 8 அடி தூரத்திற்கு தூக்கிய வீசிய எறுமை

அமெரிக்காவில் (America) உள்ள எல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் (Yellow Stone National Park) 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சுற்றிப்பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அங்கிருந்த சுமார் 900 கிலோ எடை கொண்ட காட்டு எறுமை மாடு ஒன்றை தூரத்தில் இருந்து அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது கடும் கோபத்திற்கு உள்ளான அந்த எறுமை மாடு, முதியவரை முட்டி தூக்கி வீசியுள்ளது. இதனால், அந்த முதியவர் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தான் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : முதலிரவு அறையாக மாறிய ரயிலின் ஏசி கோச் கேபின்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அந்த முதியவர் சிறுமி ஒருவருடன் சற்று தொலைவில் நின்றுக்கொண்டு எறுமையை புகைப்படம் எடுத்துக்கொண்டு இருக்கிறார். மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் அந்த எறுமை, தனது கொம்பை மண்ணில் புரட்டி எடுக்கிறது. சிறிதி நேரத்தில் அந்த எறுமை முதியவரை துரத்த தொடங்கிகிறது. அவர் எறுமையிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அங்கிருக்கும் மரங்களை சுற்றி ஓடுகிறார்.

இதையும் படிங்க : Viral Video : வயநாட்டில் கண் இமைக்கும் நேரத்தில் சூரையாடிய நிலச்சரிவு.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

ஆனால், விடாமல் முதியவரை துரத்தும் எறுமை அவரை முட்டி தூக்குகிறது. அதனால், முதியவர் சுமார் 8 அடி தூரத்திற்கு வானில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து பலத்த காயமடைகிறார். இவை அனைத்தும் இந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

Follow Us