AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : எம்பயர் ஸ்டேட் கட்டட ப்ரொபோசலை ரீகிரியேட் செய்ய முயன்ற பீகார் ஜோடி.. வைரல் வீடியோ!

Bihar Couple Proposal Gone Wrong | அமெரிக்காவின், நியூயார்க் மாகாணத்தில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் மீது காதல் ஜோடி ஒன்று ப்ரொபோஸ் செய்த நிலையில், அதனை ரீகிரியேட் செய்ய முயன்ற பீகார் ஜோடியை போலீசார் தடுத்து நிறுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : எம்பயர் ஸ்டேட் கட்டட ப்ரொபோசலை ரீகிரியேட் செய்ய முயன்ற பீகார் ஜோடி.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Jul 2026 20:24 PM IST

கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களை ஒரு வீடியோ ஆக்கிரமித்துள்ளது. அதாவது ரஷ்ய ஜோடி ஒன்று அமெரிக்காவின் (America), நியூயார்க் (Newyork) மாகாணத்தில் உள்ள, எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் (Empire State Building) மேலே ப்ரொபோஸ் செய்த வீடியோ தான். அந்த தம்பதியின் இந்த செயல் சட்டத்திற்கு புறம்பானதாக கருதப்பட்ட நிலையில், அவர்களை காவல்துறை கைது செய்து பிறகு விடுதலையும் செய்துள்ளது. இந்த நிலையில் தான், அவர்களது ப்ரொபோசல் வீடியோ சமூக ஊடகங்கள் முழுவதும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த ரஷ்ய ஜோடியை போலவே பீகாரில் செல்போன் டவர் மீது ஏறி ப்ரொபோஸ் செய்ய முயன்ற ஜோடியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நீயூயார்க் சம்பவத்தை ரீகிரியேட் செய்ய முயன்ற பீகார் ஜோடி

ரஷ்யாவை சேர்ந்த ஜோடி ஒன்று, அமெரிக்காவின், நியூயார்க் மாகாணத்தில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் மீது ஏறி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர்களை கண்காணிக்க உடனடியாக காவல்துறையினர் எலிகாப்டரை அனுப்பி சோதனை செய்தபோது, அவர்கள் காதல் ப்ரொபோஸ் செய்தது தெரிய வந்தது. இருப்பினும் அவர்கள் செய்தது சட்டத்திற்கு புறம்பானது என்பதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுகிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க : Viral Video : ஐரோப்பா வெயிலில் ஆம்லெட் போட்ட நபர்.. இணையத்தை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கிய வீடியோ!

இணையத்தில் வைரலாகும் பீகார் தம்பதியின் வீடியோ

எம்பயர் ஸ்டேட் கட்டட காதல் ப்ரொபோசல் சம்பவத்தை ரீகிரியேட் செய்ய முடிவு செய்த பீகார் தம்பதி, செல்போன் டவரின் மீது ஏறியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கு சென்ற காவல்துறையினர் அவர்கள் ப்ரொபோஸ் செய்வதற்கு முன்னதாகவே அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : Viral Video : சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் தலையில் விழுந்த மரக்கிளை.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!

இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Follow Us