AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : ஐரோப்பா வெயிலில் ஆம்லெட் போட்ட நபர்.. இணையத்தை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கிய வீடியோ!

Man Made Omelet Using Heatwave In Europe | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஐரோப்பாவில் ஒருவர் வெயிலில் ஆம்லெட் போடுவது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : ஐரோப்பா வெயிலில் ஆம்லெட் போட்ட நபர்.. இணையத்தை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கிய வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 30 Jun 2026 18:20 PM IST

சமூக ஊடகங்களின் உதவியால், உலகில் நம்மை சுற்றி நடைபெறும் சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஐரோப்பாவில் (Europe) கொளுத்தும் வெயிலில் ஒருவர் ஆம்லெட் போடுவது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஐரோப்பா வெயிலில் ஆம்லெட் போட்ட நபர்

உலக நாடுகள் வழக்கத்தை விட இந்த ஆண்டு கடும் வெப்பத்தை எதிர்க்கொண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் வெப்பம் தாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். தார் சாலைகள் உருகுவது,  வாகனங்கள் உருகுவது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், ஐரோப்பா வெயிலில் ஒருவர் ஆம்லெட் போட்டது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : கடல் அலையில் சிக்கி காணாமல் போன நபர்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Olivier Hude (@olivierhude)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஐரோப்பாபில் ஒருவர் தனது வீட்டின் ஜன்னலில் ஒரு தோசை தவாவை நன்கு வெயில் படும் வகையில் வைத்துள்ளார். பிறகு ஒரு முட்டையை எடுத்து அதன் மீது ஊற்றுகிறார். உடனே அந்த முட்டை, அடுப்பில் வைத்து ஆம்லெட் போடும்போது எப்படி வேகுமோ அதே அளவுக்கு மாறுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : 3.5 ஆண்டுகள் கழித்து வீட்டிற்கு வந்த இளம் பெண்.. உற்சாக வரவேற்பு அளித்த குடும்பம்!

ஐரோப்பாவில் வெயில் கொளுத்துவது தொடர்பான வீடியோக்கள் பல இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், இந்த நபர் வெப்பத்தை பயன்படுத்தி ஆம்லெட் போடுவது தொடர்பான வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Follow Us