AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : Man Vs Snake.. வரப்பில் பாம்புடன் சண்டை போட்ட நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Man Fighting With Snake In Vietnam | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், வியட்நாமில் ஒருவர் பாம்புடன் நேருக்கு நேர் நின்று சண்டை போடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : Man Vs Snake.. வரப்பில் பாம்புடன் சண்டை போட்ட நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Jun 2026 18:02 PM IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். சில ஆச்சர்யமான சம்பவங்கள் மற்றும் அதிசயமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், வியட்நாமில் (Vietnam) ஒருவர் பாம்புடன் சண்டை போடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

வியட்நாமில் பாம்புடன் சண்டை போட்ட நபர்

உலகில் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த உயிரினங்களில் ஒன்றாக பாம்புகள் உள்ளன. இதன் காரணமாக பாம்பை கண்டால் படையும் நடங்கும். எப்படிப்பட்ட தைரியசாலியாக இருந்தாலும் பாம்பை கண்டால் அஞ்சி நடுங்குவர். ஆனால், வியட்நாமை சேர்ந்த ஒருவர் பாம்புடன் நேருக்கு நேர் நின்று சண்டையிடுகிறார். அந்த பாம்பும் பின்வாங்காமல் அந்த நபருடன் சண்டையிடுகிறது. இது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : எச்சில் துப்ப வேண்டாம் என கூறியதால் ஆத்திரம்.. முதியவரை சரமாரியாக தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒருவர் வயல்வெளியின் வரப்பின் மீது நின்றுக்கொண்டு இருக்கிறார். அவருக்கு அருகில் இருக்கும் வயல்வெளியில் இருந்து பாம்பு ஒன்று எட்டிப்பார்க்கிறது. அதனை அந்த நபர் தனது காலால் எட்டி உதைக்கிறார். அதன் காரணமாக சிறிது தூரம் சென்று விழும் அந்த பாம்பு, மீண்டும் வேகமாக சீறிக்கொண்டு அந்த நபரை தாக்க வருகிறது. அவர் மீண்டும் அந்த பாம்பை எட்டி உதைக்கிறார். இவ்வாறு அவர் பாம்பை எட்டி உதைக்க அந்த பாம்பு மீண்டும் சீறிக்கொண்டு வருகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : நாய் குட்டியை மரத்தின் மீது தூக்கிச் சென்ற குரங்கு.. வைரல் வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us