Viral Video : தாஜ் மஹால் தண்ணீர் தொட்டியில் ஆட்டம் போட்ட குரங்குகள்.. வைரலாகும் வீடியோ!
Monkeys Joyfully Baths In Taj Mahal Water Tank | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தாஜ் மஹால் முன்பு உள்ள தண்ணீர் தொட்டியில் குரங்குகள் சில உல்லாசமாக குளிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உலகில் நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அதிலும் குறிப்பாக சில வீடியோக்கள் மிக வேகமாக வைரலாகி இணையத்தில் பேசுபொருளாக மாறும். அந்த வகையில் தான், தாஜ் மஹாலில் உள்ள தண்ணீர் தொட்டியில் குரங்குகள் குளிப்பது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தாஜ் மஹால் தண்ணீர் தொட்டியில் ஆட்டம் போட்ட குரங்குகள்
உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக இந்தியாவில் உள்ள தாஜ் மஹாலும் உள்ளது. இதன் காரணமாக இந்தியர்கள் மட்டுமன்றி, உலக நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தாஜ் மஹாலை சுற்றி பார்க்க வருகை புரிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இத்தகைய மிக பிரபலமான சுற்றுலா தளமாக தாஜ் மஹால் உள்ள நிலையில், அங்கு நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video : ஏன் எங்கு சென்றாலும் நடனமாடுகிறீர்கள்.. மீண்டும் வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Monkeys Turn Taj Mahal Fountain Into a Water Park Amid Scorching Heatwave #tajmahal #mokeys #waterpark #heatwave #viralvideo pic.twitter.com/qi5kUd638J
— The Savera Times (@thesavera_times) June 5, 2026
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் தாஜ் மஹால் முன்பு இருக்கும் தண்ணீர் தொட்டியில் சில குரங்குகள் உல்லாசமாக குளித்துக்கொண்டு இருக்கின்றன. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மிக கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், காட்டு பகுதிகளில் இருந்து விலங்குகள் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் தண்ணீர், உணவு தேடி வருவது தொடர்பான வீடியோக்கள் நாள்தோறும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், குரங்குகள் சில வெப்பத்தை தணிக்கும் வகையில் தாஜ் மஹால் முன்பு உள்ள தண்ணீர் தொட்டியில் குளித்து மகிழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : வியட்நாம் விமான நிலையத்தில் கப்ரா நடனமாடிய இந்தியர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.