AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : இளைஞர்கள் மத்தியில் திருமணம் செய்ய தயக்க ஏன்.. முதியவர் சொன்ன முக்கிய காரணங்கள்.. வைரல் வீடியோ!

Old Man Explaining Why Youngsters Not Ready To Get Married | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளைஞர்கள் மத்தியில் திருமணத்தின் மீதான ஆர்வம் குறைந்துள்ளது குறித்து முதியவர் விளக்கம் அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : இளைஞர்கள் மத்தியில் திருமணம் செய்ய தயக்க ஏன்.. முதியவர் சொன்ன முக்கிய காரணங்கள்.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 28 May 2026 23:45 PM IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் நாள்தோறும் இணையத்தில் பல்வேறு வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளைஞர்கள் மத்தியில் திருமணம் செய்துக்கொள்வதற்கான ஆர்வம் குறைந்துள்ளது ஏன் என்பது குறித்து முதியவர் ஒருவர் விளக்கம் அளித்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதன் காரணமாக தான் இளைஞர்கள் திருமணம் செய்வதில்லை – முதியவர்

முன்பெல்லாம் பெரும்பாலானவர்கள் 25 வயதுக்குள்ளாக திருமணம் செய்துவிடுவர். திருமணம் செய்த கையோடு குழந்தைகளையும் பெற்றுக்கொள்வர். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் அது தலைகீழாக உள்ளது. தற்போதைய சூழலில் 35 வயது வரை பலரும் திருமணம் செய்துக்கொள்கின்றனர். அவ்வாறு திருமணம் செய்தாலும் குழந்தைகளை பெற்றுக்கொள்ளாமல் இருப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : Viral Video : தண்ணீர் தாகத்தில் பேருந்தை வழிமறித்த குரங்குகள்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Vinod Kumar Sharma (@instauncle_9)

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், தற்போதைய காலக்கட்டத்தில் ஏன் இளைஞர்கள் தாமதமாக திருமணம் செய்துக்கொள்கின்றனர் அல்லது திருமணமே வேண்டாம் என முடிவு எடுக்கின்றனர் என ஒரு முதியவரிடம் கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு அந்த முதியவர், தற்போதைய காலக்கட்டத்தில் 30 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் திருமணத்திற்காக மட்டும் பயப்படுவது இல்லை. அவர்கள் தவறான தேர்வை செய்துவிடுவோமோ என நினைக்கிறார்கள்.

இதையும் படிங்க : Viral Video : நியூயார்க் கனமழை.. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்!

அவர்கள் தங்களுக்கு முன்பு திருமணம் செய்தவர்கள் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதை பார்க்கிறார்கள். மகிழ்ச்சியற்ற உறவில் இருக்கும் பலரும் அது குறித்து பேச முடியாமல் இருக்கின்றனர். திருமண உறவில் இருந்து வெளியேறுவது சவாலானது என்பதால் பலர் அப்படியே அமைதியாக தங்களது வாழ்க்கையை நடத்துகின்றனர்.

இதன் காரணமாக தான் தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் திருமணம் செய்துக்கொள்ள விருப்பமில்லாமல் இருக்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Follow Us