Viral Video : தண்ணீர் தாகத்தில் பேருந்தை வழிமறித்த குரங்குகள்.. வைரல் வீடியோ!
Thirsty Monkeys Stopped Bus To Get Water | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தண்ணீர் தாகத்தில் இருக்கும் குரங்குகள் சில, பேருந்தை வழிமறித்து பயணிகளிடம் இருந்து தண்ணீர் குடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெப்பத்தின் அளவு மிக கடுமையாக உள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் (Maharashtra) குரங்கு கூட்டம் ஒன்று தண்ணீருக்காக அரசு பேருந்தை வழிமறித்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தண்ணீருக்காக அரசு பேருந்தை வழிமறித்த குரங்குகள்
இந்தியாவில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருப்பது மனிதர்களை மட்டுமன்றி, விலங்குகளை மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக்கியுள்ளது. காடுகளில் உள்ள நீர்நிலைகள் தண்ணீர் இன்றி வற்றி காணப்படும் நிலையில், காட்டில் இருக்கும் விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு வருவது ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிராவில் தண்ணீருக்காக குரங்கு கூட்டம் ஒன்று அரசு பேருந்தை வழிமறித்த சம்பவம் தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.
இதையும் படிங்க : Viral Video : திடீரென பறந்த இந்தோனேசியா பெண்ணின் துப்பட்டா.. தண்டவாளத்தில் இறங்கி எடுத்த நபர்!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
Extreme Heat in Maharashtra Leaves Monkeys Desperate for Drinking Water#Maharashtra #Heatwave #Monkey #Wildlife #ExtremeHeat pic.twitter.com/NyHaKGIz2D
— NewsMobile (@NewsMobileIndia) May 22, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், குரங்குகள் சில சாலையில் அமர்ந்துக்கொண்டு இருக்கின்றன. அவற்றுக்கு பொதுமக்கள் குடிக்க தண்ணீர் கொடுக்கின்றனர். கடுமையான தாகத்தில் இருக்கும் அந்த குரங்குகள் தண்ணீரை வாங்கி குடிக்கின்றன. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : காற்றில் தூக்கி வீசப்பட்ட ஷெட்.. வானத்தில் பறந்த நபர்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
தண்ணீருக்காக பேருந்தை வழிமறித்த அந்த குரங்குகள் தண்ணீர் குடித்து தங்களது தாகம் அடங்கிய பிறகே பேருந்து செல்ல வழிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.