Viral Video : மனைவி தான் முக்கியம்.. குழந்தையை பார்க்காமல் மனைவியை பார்க்க சென்ற கணவர்.. வைரல் வீடியோ!
Man Ran To Wife After Delivery | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், கணவர் ஒருவர் பிறந்த தனது குழந்தையை பார்க்காமல் மனைவியை பார்க்க சென்றது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களின் உதவியால் இணையத்தில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். நமது அன்றாட வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் கூட வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தனக்கு குழந்தை பிறந்திருக்கும் நிலையில், கணவர் ஒருவர் குழந்தையை பார்க்காமல் தனது மனைவியை முதலில் பார்த்து, கட்டி அணைத்து அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எனக்கு மனைவி தான் முக்கியம் – கணவர் செய்த நெகிழ்ச்சி செயல்
குழந்தை பெற்றெடுப்பது என்பது பெண்களுக்கு மறுபிறவு போல தான். உடலில் தீ வைத்து கொளுத்திக்கொள்வதற்கு அடுத்து பிரசவ வலி தான் மிகப்பெரிய வலியாக உள்ளது. இந்த நிலையில், பிரசவ அறைக்கு சென்று ஒரு பெண் உயிருடன் வருவதே மிகவும் சவாலானதாக உள்ளது. இந்த நிலையில், குழந்தை பிறந்த பிறகு உறவினர்களின் கவனம் முழுவதும் புதியதாக பூமிக்கு வந்த அந்த உயிரின் மீது தான் இருக்கும். அந்த சமயம் குழந்தையை பெற்றெடுத்த தாயை யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள். இது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்களுக்கு மிகுந்த மன கசப்பை தருவதாக இருக்கும். இந்த நிலையில் தான், கணவர் ஒருவர் தனது குழந்தையை கூட பார்க்காமல் முதலில் மனைவியை கட்டி அணைத்து அழும் வீடியோ வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : Viral Video: ஜிப்லைன் சவாரியில் ஏற்பட்ட கோளாறு.. 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த நபர் – வைரலாகும் காட்சி
இணையத்தில் வைரலாகும் வீடியோ
View this post on Instagram
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பெண் ஒருவர் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அறையின் கதவை திறக்கிறார். அப்போது உள்ளே வரும் அந்த குழந்தையின் தந்தை முதலில் குழந்தையை பார்க்காமல் நேராக தனது மனைவியை பார்க்க செல்கிறார். அவர், தனது மனைவியை கட்டி அணைத்து அழ தொடங்குகிறார். தனது மனைவி நலமுடன் உள்ளார் என்பதை தெரிந்துக்கொண்ட பிறகு தான் அவர், தனது குழந்தையை கையில் வாங்குகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.