Viral Video: ஜிப்லைன் சவாரியில் ஏற்பட்ட கோளாறு.. 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த நபர் – வைரலாகும் காட்சி..
விஜயபுராவைச் சேர்ந்த குபேர் சுர்பூர் என்பவர் இந்த விபத்தில் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்லைன் சவாரியின் போது நடுவானில் பாதுகாப்பு பூட்டு செயலிழந்ததால், அவர் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அவரது கைகள் மற்றும் கால்களில் பல்வேறு எலும்பு முறிவுகள் ஏற்பட்டதுடன், நரம்பு பாதிப்பும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 20, 2026: சாகசப் பயணமாகத் தொடங்கிய சுற்றுலா, கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவருக்கு பெரும் விபத்தில் முடிந்துள்ளது. தண்டேலியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் ஜிப்லைன் சவாரியின்போது பாதுகாப்பு அமைப்பு செயலிழந்ததாகக் கூறப்படும் நிலையில், சுற்றுலாப் பயணி ஒருவர் சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
ஜிப்லைனில் ஏற்பட்ட கோளாறு – 40 அடி உயரத்திலிருந்து விழுந்த நபர்:
Never do adventure sports in India. Just not worth the risk.
happened during zipline at Starling River Resort, Dandeli.
Karnataka’s 40 Year old Kuber suffered fractures on hands and legs with nerve damage. He is in hospital but safe. pic.twitter.com/Ah1dvjFPeO— Gary Pike 🇺🇦🇮🇳 (@PikeWala) July 19, 2026
விஜயபுராவைச் சேர்ந்த குபேர் சுர்பூர் என்பவர் இந்த விபத்தில் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்லைன் சவாரியின் போது நடுவானில் பாதுகாப்பு பூட்டு செயலிழந்ததால், அவர் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அவரது கைகள் மற்றும் கால்களில் பல்வேறு எலும்பு முறிவுகள் ஏற்பட்டதுடன், நரம்பு பாதிப்பும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் கேமராவில் பதிவான நிலையில், தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதையடுத்து, சாகச சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
விபத்து நடந்தது எப்படி?
குபேர் சுர்பூரின் குடும்பத்தினர் கூறுகையில், அவர் காற்றில் தொங்கிக் கொண்டிருந்தபோது ஜிப்லைனின் பாதுகாப்பு பூட்டு திடீரென செயலிழந்ததாகத் தெரிவித்துள்ளனர். மேலும், ரிசார்ட் நிர்வாகத்தின் அலட்சியமே விபத்துக்குக் காரணம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஜிப்லைன் உபகரணங்கள் துருப்பிடித்த நிலையில் காணப்பட்டதாகவும், அவை முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: டிஜிட்டல் கைது என கூறி முதியவரிடம் ரூ.22 லட்சம் கொள்ளையடித்த கும்பல்!
விபத்தில் காயமடைந்த குபேர் முதலில் தண்டேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக விஜயபுராவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால், தொடர்ந்து மிரஜில் உள்ள மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சோதனைகள் மூலம் தடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறியுள்ள குபேரின் குடும்பத்தினர், ரிசார்ட் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இணையத்தில் வேகமாக பரவும் காட்சிகள்:
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சாகச விளையாட்டு மற்றும் சுற்றுலா தளங்களில் கடுமையான பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், உபகரணங்களைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
சமூக வலைதளப் பயனர் ஒருவர், “இது மிகவும் மோசமான ஜிப்லைன் வடிவமைப்பு. ஒருவர் கயிற்றை விட்டுவிட்டாலும் கீழே விழாத வகையில் பாதுகாப்புப் பட்டைகள் உடலுடன் உறுதியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இப்படிப்பட்ட அமைப்புக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க: லண்டனில் முதல் முறையாக திறக்கப்பட்ட ஹல்திரம்ஸ் கடை.. கூட்டம் கூட்டமாக குவிந்த இந்தியர்கள்.. வைரல் வீடியோ!
மற்றொரு பயனர், “ஒரு சிறிய அபராதம் விதிக்கப்படும். சில வாரங்களுக்கு ரிசார்ட் மூடப்படும். அதன் பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கிவிடும். ஆனால், நீதி கிடைக்காது” என விமர்சித்துள்ளார்.