AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Viral Video : காரின் பேனட் மீது வைத்து இளம் பெண்ணை இழுத்துச் சென்ற நபர்.. ஷாக் வீடியோ!

Man Drags Young Woman On Car Bonnet | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், லக்னோவில் இளம் பெண் ஒருவரை, இளைஞர் காரின் பேனட் மீது வைத்து இழுத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : காரின் பேனட் மீது வைத்து இளம் பெண்ணை இழுத்துச் சென்ற நபர்.. ஷாக் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Sep 2026 20:33 PM IST

சமூக ஊடகங்களின் உதவியால் இணையத்தில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், லக்னோவில் இளம் பெண் ஒருவரை, இளைஞர் ஒருவர் காரின் பேனட் மீது வைத்து, சாலையில் தரதரவென இழுத்துச் செல்வது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

காரின் பேனட் மீது வைத்து இளம் பெண்ணை இழுத்துச் சென்ற நபர்

லக்னோவில், இளம் பெண் ஒருவர் காரின் பேனட் மீது வைத்து சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்படுவது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவை சேர்ந்த அனாமிகா, ஷா நவாஸ் ஆகியோர் காதலித்து வந்துள்ளனர். ஆனால், ஷா நவாஸ் வேறு ஒரு பெண்ணுடன் இருந்த நிலையில், அதனை கண்ட காதலி சண்டையிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த காதலன் அந்த இளம் பெண்ணை அவ்வாறு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ தான் வெளியாகி, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Watch Video: முதலமைச்சர் விஜய் ஸ்டைலில் விநாயகர் சிலை.. இணையத்தில் கலக்கும் வைரல் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அந்த் இளம் பெண் கத்தி கூச்சலிடுகிறார். ஆனால், அவற்றையெல்லாம் கண்டுக்கொள்ளாத அந்த இளைஞர், காரை ஓட்டுகிறார். இதில் அந்த பெண், காயமடைகிறார். இவையெல்லாம் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

Follow Us