AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Viral Video : குட்டி நாயை தாக்காமல் விட்ட சிறுத்தை.. அந்த மனசு தான் கடவுள்.. இணையத்தை கவர்ந்த வீடியோ!

Leopard Spare Little Puppy In Maharashtra | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சிறுத்தை ஒன்று குட்டி நாயை தாக்கமல் விட்டுச் சென்றது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : குட்டி நாயை தாக்காமல் விட்ட சிறுத்தை.. அந்த மனசு தான் கடவுள்.. இணையத்தை கவர்ந்த வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 01 Sep 2026 19:06 PM IST

முன்பெல்லாம் ஒரு சம்பவம் நடந்தது என்றால் அதனை யாரேனும் நேரில் பார்த்திருக்க வேண்டும், இல்லையென்றால் அதற்கான வீடியோ ஆதாரங்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது அப்படி இல்லை. பெரும்பாலான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதன் காரணமாக, ஏதேனும் சம்பவங்கள் நடந்தால் அது அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிவிடுகிறது. இதன் மூலம் நம்பவே முடியாத சம்பவங்கள் கூட உலகித்திற்கு தெரிய வருகிறது. அந்த வகையில், மிகவும் வியப்பூட்டும் ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நாய் குட்டியை துன்புறுத்தாமல் விட்டுச் சென்ற சிறுத்தை

சமீப காலமாக குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் நடமாடுவது தொடர்கதையாகி வருகிறது. உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகள், குடியிருப்பு பகுதிகளில் புகுந்து கோழி, நாய் உள்ளிட்ட பிராணிகளை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது. இத்தகைய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் அவ்வப்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தான், சிறுத்தை ஒன்று நாய் குட்டியை தாக்காமல் விட்டுச் சென்றது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : ரயில் தண்டவாளத்தில் சாவகாசமாக நடந்துச் சென்ற சிறுத்தை குட்டி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், சிறுத்தை ஒன்று நாய்களை துரத்திச் செல்கிறது. அதில் இரண்டு குட்டி நாய்கள் மற்றும் ஒரு தாய் நாய் உள்ளன. தாய் நாயும், ஒரு குட்டி நாயும் தப்பிச் சென்றுவிட, ஒரு குட்டி நாய் மட்டும் பின்தங்கிவிடுகிறது. ஆனால், அந்த சிறுத்தையோ குட்டி நாயை காயப்படுத்தாமல் அப்படியே விட்டுவிகிறது. வேட்டையாடும் குணம் கொண்ட சிறுத்தை குட்டி நாயை தாக்காமல் விட்ட சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow Us