Watch Video: நேபாள வெள்ளப்பெருக்கு.. சிக்கிய ஒற்றை வீடு – தப்பிய உயிர்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சி..
மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிக்கட்டி மற்றும் பாறை சரிவு காரணமாக இந்த திடீர் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை 8.30 மணிக்குப் பிறகு போதேகோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ஆற்றில் சேறு, தண்ணீர் மற்றும் இடிபாடுகள் பெரும் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
ஆகஸ்ட் 29, 2026: நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு கிராமமே அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கிருந்து வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. எக்ஸ் தளத்தில் வெளியான சுமார் 2 நிமிட வீடியோவில், சேறு, தண்ணீர் மற்றும் கட்டிட இடிபாடுகள் கலந்த வெள்ளம் பெரும் வேகத்துடன் பாய்ந்து செல்வது பதிவாகியுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய ஒற்றை வீடு – வைரல் காட்சிகள்:
Terrifying footage shows a flash flood sweeping through the Nepal–Tibet border, trapping people on rooftops and balconies. At least 469 have been killed, with hundreds still missing. pic.twitter.com/xRgRWmwut7
— Weather Monitor (@WeatherMonitors) August 28, 2026
அந்த வெள்ளத்துக்கு மத்தியில், வெளிர் பச்சை நிறத்தில் இரண்டு மாடிகளைக் கொண்ட ஒரு வீடு மட்டும் தாக்குப்பிடித்து நிற்கிறது. அந்த வீட்டைச் சுற்றிலும் சேறும் சகதியும் சூழ்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகளுக்கான வாய்ப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் இரண்டாவது மாடி பால்கனியில் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை என குறைந்தது 3 பேர் சிக்கித் தவிப்பதும் வீடியோவில் தெரிகிறது. அவர்களைச் சுற்றிலும் பெரும் அளவில் சேறு பாய்ந்து கொண்டிருக்கிறது. இதில் பாறைகள், கட்டிட இடிபாடுகள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் அடித்துச் செல்லப்பட்டு, வீட்டின் மீது மோதிக் கொண்டிருக்கின்றன. இதனால் வீடும் எப்போது வேண்டுமானாலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நேபாள வெள்ளம் – 500 பேர் உயிரிழப்பு:
இதனிடையே, இந்த திடீர் வெள்ளத்தில் இதுவரை சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைதூரப் பகுதிகளுடனான தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் படிப்படியாக மீண்டும் கிடைக்கும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களில் சுமார் 290 பேர் இந்தியர்கள் என்றும் கூறப்படுகிறது.
மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிக்கட்டி மற்றும் பாறை சரிவு காரணமாக இந்த திடீர் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆகஸ்ட் 26ஆம் தேதி காலை 8.30 மணிக்குப் பிறகு போதேகோஷி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து ஆற்றில் சேறு, தண்ணீர் மற்றும் இடிபாடுகள் பெரும் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
மேலும் படிக்க: நேபாள வெள்ளத்தில் சிக்கிய 290 இந்தியர்கள்; தமிழகத்தைச் சேர்ந்த 86 பேர் மாயம்
வெள்ளப்பெருக்கு உருவானது எப்படி ?
இதன் காரணமாக ஆற்றின் குறுக்கே தடுப்பு ஏரி ஒன்று உருவாகி, அதில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி வந்தது. வெள்ளிக்கிழமை காலை அந்த ஏரி நிரம்பி வழியத் தொடங்கியதால், மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் சில மணி நேரங்களில் நீர் வழிந்து செல்வது நின்றுவிட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நிறுத்தப்பட்டிருந்த மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான ராசுவா பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீர்மின் நிலைய சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 2 பேரை நேபாள ராணுவத்தினர் பத்திரமாக மீட்டுள்ளனர்