Viral Video : ரயில் தண்டவாளத்தில் சாவகாசமாக நடந்துச் சென்ற சிறுத்தை குட்டி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Leopard Cub Walking In Train Track | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சிறுத்தை குட்டி ஒன்று ரயில் தண்டவாளத்தில் நடந்துச் செல்லும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்களில் சில ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சில அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அந்த வகையில், ரயில் தண்டவாளத்தில் சிறுத்தை குட்டி ஒன்று சாவகாசமாக நடந்துச் செல்வது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரயில் தண்டவாளத்தில் சாவகாசமாக நடந்துச் சென்ற சிறுத்தை குட்டி
தண்ணீர், உணவு தேடி, வெப்பம் அதிகரித்தன் காரணமாக என பல்வேறு காரணங்களால் வனவிலங்குகள் காட்டு பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. இது தொடர்பான வீடியோக்களும் அவ்வப்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சத்தீஸ்கரில் ரயில் தண்டவாளத்தில் சிறுத்தை குட்டி ஒன்று நடந்துச் செல்வது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : தேசிய பறவையை வேட்டையாடிய தேசிய விலங்கு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
A leopard cub was spotted running on the tracks inside the Bhonwartank Tunnel on the Bilaspur-Katni railway line.
The train guard recorded video of the entire incident.#Bilaspur #KatniRailway #LeopardCub #Chhattisgarh pic.twitter.com/yChQGHxYnL— The Click Buzz (@theclickbuzzon) August 27, 2026