AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Viral Video : ரீல்ஸ் மோகம்.. கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட குழந்தை.. சர்ச்சை வீடியோ!

Viral Video Shows Child Swept by Wave at Beach | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், ரீல்ஸ் எடுக்கும் மோகத்தில் தம்பதியினர் குழந்தையை கடற்கரையில் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : ரீல்ஸ் மோகம்.. கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட குழந்தை.. சர்ச்சை வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Oct 2026 23:55 PM IST

பொதுமக்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக எங்கு சென்றாலும் அதனை வீடியோ பதிவு செய்து தங்களது சமூக ஊடக கணக்குகளில் பகிர்வதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு, எப்போது வீடியோ எடுப்பதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதால் பல்வேறு விபத்துகளும் நடைபெறுகிறது. அந்த வகையில், கடற்கரையில் பெற்றோர் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு இருந்த நிலையில், அவர்களின் குழந்தை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலை உருவான சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குழந்தையை விட்டுவிட்டு ரீல்ஸ் எடுத்த தம்பதி

தங்களது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். குடும்பத்துடன் வெளியே செல்வது, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடன் இருக்கும் புகைப்படங்கள் என தங்களுக்கு பிடித்தவர்கள், பிடித்த இடங்கள், செயல்கள் ஆகியவற்றை பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தான், இந்த தம்பதியும் தங்களை மறந்து ரீல்ஸ் எடுப்பதில் மூழ்கிய நிலையில், அது குழந்தையின் உயிரையே பறிக்கும் அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : தலைக்கவசம் அணியாமல் பைக்கில் ஸ்டைலாக சாகசம் செய்த பெண்.. ரூ.16,000 அபராதம்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் தம்பதியினர் கடற்கரையில் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்களது குழந்தை கடற்கரையில் படுத்துக்கொண்டு இருக்கிறது. அப்போது பெரிய அலை வந்து கடற்கரையை மோதும் நிலையில், குழந்தை அலையில் இழுத்துச் செல்லப்படுகிறது. அதனை பார்த்த நபர் ஓடிச் சென்று குழந்தையை காப்பாற்றுகிறார். ஆனால், அதனையும் பொருட்படுத்தாமல் அந்த தம்பதியினர் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

Follow Us