AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்.. 3 முக்கிய சாதனைகளை தொடுவாரா இஷான் கிஷன்?

Ishan Kishan Eyes Big T20 Records: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் வரலாற்றுச் சாதனைகளை படைக்கவுள்ளார். சூர்யகுமார் யாதவ் மற்றும் முகமது ரிஸ்வானின் சாதனைகளை முறியடிக்க அவருக்கு சில ரன்களே தேவை. மேலும், இஷான் டி20 சர்வதேசப் போட்டிகளில் 2,000 ரன்கள் மற்றும் ஒரே ஆண்டில் 2,000 டி20 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டவும் வாய்ப்புள்ளது.

IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்.. 3 முக்கிய சாதனைகளை தொடுவாரா இஷான் கிஷன்?
இஷான் கிஷன்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Oct 2026 21:19 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான இஷான் கிஷன் (Ishan Kishan), நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் (IND vs NZ) சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பொறிக்க ஒரு சிறந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார். 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை அதாவது 2026 அக்டோபர் 22ம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில், இஷான் கிஷான் 3 முக்கிய சாதனைகளைக் குறிவைத்துள்ளார். அதில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவின் சாதனையை முறியடிப்பதற்கு மிக அருகில் இருக்கும் அதே வேளையில், டி20 சர்வதேசப் போட்டிகளில் 2,000 ரன்களை எட்டுவதற்கும் வெகு தொலைவில் இல்லை. மேலும், ஒரே ஆண்டில் 2,000 டி20 ரன்களைக் குவித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் இஷான் கிஷன் படைக்கக்கூடும்.

ALSO READ: ஹாட் ஸ்டார் இல்லை.. இந்தியா – நியூசிலாந்து முதல் டி20யை எங்கு காணலாம்?

ஒரே ஆண்டில் அதிக ரன்கள்:

ஒரு காலண்டர் ஆண்டில் இந்தியாவுக்காக அதிக டி20 சர்வதேச ரன்கள் எடுத்த சாதனையை முறியடிப்பதே இஷான் கிஷனின் முதன்மை இலக்காகும். சூர்யகுமார் யாதவ் 2022-ல் 1,164 ரன்கள் எடுத்தார். இதற்கிடையில், இஷான் ஏற்கனவே 2026-ல் 1,158 ரன்கள் எடுத்துவிட்டார். எனவே, இந்த சாதனையை முறியடிக்க இஷான் கிஷன் இன்னும் 7 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும். நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே அவரால் சூர்யகுமாரை முந்த முடியும்.

முகமது ரிஸ்வானின் சாதனையும் ஆபத்து:

ஒரு காலண்டர் ஆண்டில், டெஸ்ட் விளையாடும் நாட்டைச் சேர்ந்த ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச டி20 சர்வதேச ரன்கள் என்ற சாதனையை முறியடிப்பதற்கான வாய்ப்பும் இஷானுக்கு உள்ளது. பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 2021-ல் 1,326 ரன்கள் எடுத்தார். இந்த இலக்கைத் தாண்டுவதற்கு இஷான் இன்னும் 169 ரன்கள் எடுக்க வேண்டும். இந்தச் சாதனையை அடைய, இஷான் கிஷான் இந்தத் தொடரில் பெரிய இன்னிங்ஸ்களை விளையாட வேண்டும்.

டி20 சர்வதேசப் போட்டிகளில் 2,000 ரன்களை நிறைவு செய்வதற்கான வாய்ப்பு

இஷான் கிஷன் தனது டி20 சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 1,954 ரன்கள் எடுத்துள்ளார். 2,000 ரன்களை எட்ட அவருக்கு இன்னும் 46 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. இந்த மைல்கல்லை இஷான் கிஷன் எட்டும்போது, ​​இந்தச் சாதனையை எட்டிய 7வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெறுவார்.

ALSO READ: சவால் நிறைந்த நியூசிலாந்து சூழல்.. சூர்யவன்ஷிக்கு டஃபி எச்சரிக்கை!

ஓராண்டில் 2,000 டி20 ரன்கள் இலக்கு:

அனைத்து டி20 போட்டிகளையும் சேர்த்து, ஒரு வருடத்தில் 2,000 ரன்கள் எடுப்பதற்கான வாய்ப்பும் இஷானுக்கு உள்ளது. இஷான் கிஷன் இந்த 2026ம் ஆண்டு ஏற்கனவே 1,760 ரன்கள் எடுத்துள்ளார். இந்த மைல்கல்லை எட்ட அவருக்கு இன்னும் 240 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.

Follow Us