AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ 1st T20: ஹாட் ஸ்டார் இல்லை.. இந்தியா – நியூசிலாந்து முதல் டி20யை எங்கு காணலாம்?

IND vs NZ T20 1st t20 Live Streaming: இந்தியா - நியூசிலாந்து டி20 தொடர் 2026 அக்டோபர் 22 அன்று தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், நியூசிலாந்தின் 7 வருட காத்திருப்பு முடிவுக்கு வருமா? புவனேஷ்வர், வைபவ் சூர்யவன்ஷி போன்ற வீரர்கள் இடம்பெறுவார்களா? ஷ்ரேயாஸ் கேப்டனாக சந்திக்கும் சவால்கள் என்ன? நேரலை ஒளிபரப்பு மற்றும் டி20 அணிகளின் விவரங்கள் அனைத்தையும் இங்கே காணலாம்.

IND vs NZ 1st T20: ஹாட் ஸ்டார் இல்லை.. இந்தியா – நியூசிலாந்து முதல் டி20யை எங்கு காணலாம்?
ஷ்ரேயாஸ் ஐயர் - மிட்செல் சாண்ட்னர்Image Source: ICC
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Oct 2026 15:38 PM IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு (IND vs NZ) இடையேயான டி20 தொடர் வருகின்ற 2026 அக்டோபர் 22ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் நியூசிலாந்து அணி வரலாறு படைக்க ஒரு வாய்ப்பு உள்ளது. நியூசிலாந்து அணி டி20 தொடரை பொறுத்தவரை கடந்த 7 ஆண்டுகளாக இந்திய அணியை (Indian Cricket Team) தோற்கடித்ததில்லை. புவனேஷ்வர் குமார் மீண்டும் திரும்புவாரா, மேலும் வைபவ் சூர்யவன்ஷி ஆடும் லெவனில் இடம்பெறுவாரா என்பது போன்ற கேள்விகள் நிறைந்துள்ளது. இது ஷ்ரேயாஸ் ஐயர் எடுக்கும் பிளேயிங் லெவன் அணியை பொறுத்தே விடை தெரிய வரும்.

ALSO READ: சவால் நிறைந்த நியூசிலாந்து சூழல்.. சூர்யவன்ஷிக்கு டஃபி எச்சரிக்கை!

கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயருக்கும் இந்தத் தொடர் சவாலாக இருக்கும்.  டி20 தரவரிசையில் நியூசிலாந்து அணி உலகின் 4வது இடத்தில் உள்ளதுடன், போட்டியை வென்று தரும் பல வீரர்களையும் கொண்டுள்ளது. ஃபின் ஆலன், டிம் சீஃபர்ட் மற்றும் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் ஆகியோருக்கே போட்டியின் போக்கை மாற்றும் ஆற்றல் உள்ளது. இருப்பினும், இந்திய அணியிலும் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்ற வலுவான வீரர்கள் உள்ளனர். எனவே, இந்த அனுபவ வீரர்கள் மீதும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்தநிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியின் இந்திய ரசிகர்கள் இந்தத் தொடரின் போட்டிகளை எப்போது, ​​எங்கே நேரலையில் காணலாம்? அனைத்து விவரங்களையும் இங்கே தெரிந்துகொள்வோம்.

போட்டி எத்தனை மணிக்கு நேரலையில் ஒளிபரப்பப்படும்?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்குத் தொடங்கும்.

போட்டியானது எந்த சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்படும்?

முதல் டி20 போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பும்.

நேரலையை எந்த ஓடிடி தளத்தில் காணலாம்..?

முதல் டி20 போட்டியின் நேரலை சோனி லிவ் செயலியில் கிடைக்கும்.

இந்த முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறும். இந்திய அணி இந்த மைதானத்தில் இதுவரை டி20 சர்வதேசப் போட்டியில் விளையாடியதில்லை.

ALSO READ: இந்திய அணியின் டி20 போட்டி நேரம் மாற்றம்.. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டி எத்தனை மணிக்கு தொடங்கும்?

இந்திய அணி:

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, அக்சர் படேல், ஷிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் தீர், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், புளேஷ்வர் யாதவ், அர்ஷ்தீப் குமார், அர்ஷ்தீப் குமார்.

நியூசிலாந்து அணி:

மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், ஜோஷ் கிளார்க்சன், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, லாக்கி ஃபெர்குசன், மாட் ஹென்றி, பெவோன் ஜேக்கப்ஸ், கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், டிம் சீஃபர்ட், நாதன் ஸ்மித் மற்றும் பிளேயர் டிக்னர்

Follow Us