IND vs NZ: 4 நாட்களில் அடுத்த டி20 தொடர்.. நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும் இந்தியா!
IND vs NZ T20 Series 2026 Schedule: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2026 அக்டோபர் 22 அன்று தொடங்குகிறது. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் மீண்டும் விளையாடுகிறது. கிறிஸ்ட்சர்ச், வெலிங்டன், ஆக்லாந்து, ஹாமில்டன் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு போட்டிகள் தொடங்கும்.
இந்திய அணி (Indian Cricket Team) அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் 2-2 என சமநிலையில் முடிந்ததைத் தொடர்ந்து, இந்திய வீரர்கள் நியூசிலாந்துக்கு (IND vs NZ) புறப்படுவார்கள். அதன்படி, வெறும் 4 நாட்களுக்குப் பிறகு, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி மீண்டும் களமிறங்கவுள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வருகின்ற 2026 அக்டோபர் 22ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் இரண்டு போட்டிகள் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறும். 2019 முதல் தொடர்ந்து 5 டி20 தொடர்களில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தியுள்ளதால், இந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாக இருக்கும். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியை ஆறாவது தொடர்ச்சியான தொடர் வெற்றிக்கு அழைத்து செல்வாரா என்பதை காண சுவாரஸ்யமாக இருக்கும். இந்திய அணி கடைசியாக 2022-ல் நியூசிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் விளையாடியது. அப்போது இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ALSO READ: நியூசிலாந்து தொடரில் ட்விஸ்ட்.. இந்திய ஒருநாள் அணிக்கு 2 கேப்டன்களை களமிறங்கிய பிசிசிஐ!




டி20 தொடர் எப்போது தொடக்கம்..?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வருகின்ற 2026 அக்டோபர் 22ம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறும். இரண்டாவது போட்டி 2026 அக்டோபர் 24ம் தேதி அதே மைதானத்தில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து இரு அணிகளும் வெலிங்டனுக்குப் பயணம் செய்யும். அங்கு 2026 அக்டோபர் 37ம் தேதி 3வது டி20 போட்டி நடைபெறும். 4வது டி20 போட்டி 2026 அக்டோபர் 30ம் தேதி ஆக்லாந்தில் நடைபெறும். மேலும், இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி வருகின்ற 2026 நவம்பர் 1ம் தேதி ஹாமில்டனில் நிறைவடையும்.
இந்தியா – நியூசிலாந்து டி20 தொடர் அட்டவணை:
- 22 அக்டோபர் 2026 – முதல் டி20 – கிறைஸ்ட்சர்ச்
- 24 அக்டோபர் 2026 – 2வது டி20 – கிறைஸ்ட்சர்ச்
- 27 அக்டோபர் 2026 – 3வது டி20 – வெலிங்டன்
- 30 அக்டோபர் 2026 – 4வது டி20 – ஆக்லாந்து
- 1 நவம்பர் 2026 – 5வது டி20 போட்டி – ஹாமில்டன்
இந்தப் போட்டிகள் அனைத்தும் நியூசிலாந்து மண்ணில் நடைபெறும். அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்குத் தொடங்கும். தங்களது சொந்த மண்ணில் விளையாடிய போதிலும், 2019 முதல் டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணியால் இந்திய அணியைத் தோற்கடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய டி20 அணி 2019 முதல் நியூசிலாந்து மண்ணில் தோல்வியடையாமல் இருந்து வருகிறது.
ALSO READ: நியூசிலாந்து எதிரான ஒருநாள் தொடர்.. 4 அனுபவ வீரர்களை ஒதுக்கிய பிசிசிஐ!
இந்திய டி20 அணி:
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா (துணை கேப்டன்), அக்சர் படேல், ஷிவம் துபே, நிதிஷ் குமார், நமன் தீர், புவனேஷ்வர் குமார், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ்
நியூசிலாந்து டி20ஐ அணி:
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டேரில் மிட்செல், பெவன் ஜேக்கப்ஸ், நாதன் ஸ்மித், ஜோஷ் கிளார்க்சன், கிளென் பிலிப்ஸ், டெவன் கான்வே, டிம் சீஃபர்ட், ஜேக்கப் டஃபி, மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், ஆடம் மில்னே, கைல் ஜேமிசன், பிளேயர் டிக்னர்