AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

India vs WI 5th T20: 6 பந்துகளில் 24 ரன்கள்.. யுவராஜ் சிங்கின் சாதனை முறியடித்த நமன் தீர்!

Naman Dhir Breaks Yuvraj singh Record: நமன் களத்திற்கு வந்தவுடனேயே, அதிரடியாக ஷாட்களை அடிக்கத் தொடங்கினார். நமன் தீர் வெறும் 6 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸில் 3 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் அடங்கும். இதனால், அவரது ஸ்டிரைக் ரேட் 400 ஆக இருந்தது.

India vs WI 5th T20: 6 பந்துகளில் 24 ரன்கள்.. யுவராஜ் சிங்கின் சாதனை முறியடித்த நமன் தீர்!
நமன் தீர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Oct 2026 15:35 PM IST

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு (IND vs WI) இடையேயான 5வது டி20 போட்டியில் நமன் தீர் சிறப்புமிக்க ஒரு சாதனையை நிகழ்த்தினார். மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கி, 20 ஓவர்களுக்குப் பதிலாக 9 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது. இந்தியாவால் 7.4 ஓவர்கள் மட்டுமே பேட் செய்ய முடிந்தது. பின்னர் மீண்டும் மழை பெய்ததால், ஆட்டம் முழுவதும் கைவிடப்பட்டது. இதன் காரணமாக, தொடரின் தீர்மானிக்கும் போட்டி சமனில் முடிந்து, தொடர் 2-2 என்ற கணக்கில் முடிவடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும், இந்திய அணியின் (Indian Cricket Team) இளம் பேட்ஸ்மேன் நமன் திர், இந்தத் தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, கடைசிப் போட்டியில் தனது அபாரமான பேட்டிங் திறமையால் யுவராஜ் சிங் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் சாதனைகளை முறியடித்துள்ளார்.

ALSO READ: இந்திய அணிக்குத் திரும்ப மாட்டாரா ஜடேஜா? 2027 ஒருநாள் உலகக் கோப்பை திட்டத்தில் இல்லையா?

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5வது டி20 போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் தலா 9 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியாகத் தொடங்கினர். ஆனால் 7.4 ஓவர்களுக்குப் பிறகு மீண்டும் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது, ​​இந்தியாவின் ஸ்கோர் 5 விக்கெட்டுக்கு 118 ஆக இருந்தது. இறுதியில், ஆட்டம் கைவிடப்பட்டதால், 5 போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

 6 பந்துகளில் பரபரப்பை ஏற்படுத்திய நமன் தீர்:

இந்திய இன்னிங்ஸில் இஷான் கிஷனும் சிறப்பாக பேட்டிங் செய்து வெறும் 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இதற்குப் பிறகு, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்ததும், நமன் தீர் பேட் செய்ய வந்தார். நமன் களத்திற்கு வந்தவுடனேயே, அதிரடியாக ஷாட்களை அடிக்கத் தொடங்கினார். நமன் தீர் வெறும் 6 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸில் 3 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் அடங்கும். இதனால், அவரது ஸ்டிரைக் ரேட் 400 ஆக இருந்தது.

யுவராஜ் சிங் மற்றும் தினேஷ் கார்த்திக் சாதனை முறியடிப்பு:

நமனின் இந்த சிறிய ஆனால் வேகமான ஆட்டம், டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்களின் ஒரு சிறப்பு சாதனையை மாற்றியது. குறைந்தது 5 பந்துகளை எதிர்கொண்ட இந்திய பேட்ஸ்மேன்களில் அதிகபட்ச ஸ்டிரைக் ரேட் என்ற சாதனை இப்போது நமன் தீர் பெயரில் உள்ளது. 400 ஸ்டிரைக் ரேட் எடுத்து, நமன் அவர்கள் இருவரையும் பின்னுக்குத் தள்ளினார். மழையால் போட்டி கைவிடப்பட்ட போதிலும், அவரது ஆட்டம் இந்திய கிரிக்கெட்டின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

ALSO READ: 7.4 ஓவர்களில் 118 ரன்கள்.. போட்டிக்கு எண்ட் கார்டு போட்ட மழை.. சமனில் முடிந்த தொடர்!

முன்னதாக, சர்வதேச டி20 போட்டிகளில் யுவராஜ் சிங் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருமே 362.5 என்ற ஸ்டிரைக் ரேட்டைக் கொண்டிருந்தனர். 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் 16 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். மேலும், 2018 நிதாஸ் டிராபி இறுதிப் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 29 ரன்கள் எடுத்தார்.

Follow Us