IND vs NZ: நியூசிலாந்து எதிரான ஒருநாள் தொடர்.. 4 அனுபவ வீரர்களை ஒதுக்கிய பிசிசிஐ!
India squad New Zealand tour: நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளை பிசிசிஐ அறிவித்தது. முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல் போன்ற அனுபவ வீரர்கள் ஒருநாள் அணியில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது 2027 ஒருநாள் மற்றும் 2028 டி20 உலகக் கோப்பைகளில் இவர்கள் விளையாடுவதற்கான வாய்ப்புகளை கேள்விக்குறியாக்கியுள்ளது.
நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான (IND vs NZ) டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளை பிசிசிஐ நேற்று அதாவது 2026 அக்டோபர் 16ம் தேதி அறிவித்தது. இந்த சுற்றுப்பயணத்திற்கான டி20 அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்திய அணியின் (Indian Cricket Team) நியூசிலாந்து சுற்றுப்பயணம் வருகின்ற 2026 அக்டோபர் 22ம் தேதி தொடங்குகிறது. இதில் 5 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இறுதியாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கும். 36 வயதான புவனேஷ்வர் குமார் டி20 அணியில் விளையாட உள்ளார். இருப்பினும், பல அனுபவ வீரர்கள் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்த அணி அறிவிப்பின்படி, அடுத்த இரண்டு உலகக் கோப்பைகளான 2027 ஒருநாள் மற்றும் 2028 டி20 உலகக் கோப்பைகளில் 3 வீரர்கள் விளையாடுவது சாத்தியமில்லை என்பது தெரிகிறது. இதன் மூலம், இந்த 4 வீரர்களின் எதிர்காலம் தற்போது கேள்விகுறியாக உள்ளது.
ALSO READ: நியூசிலாந்து தொடரில் ட்விஸ்ட்.. இந்திய ஒருநாள் அணிக்கு 2 கேப்டன்களை களமிறங்கிய பிசிசிஐ!
முகமது ஷமி
இந்திய அணியின் அனுபவமிக்க வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை (55) எடுத்தவர். வருகின்ற 2027ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு மிகக் குறைந்த காலமே உள்ள நிலையில், முகமது ஷமி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது, உலகக் கோப்பைக்கான திட்டங்களில் இல்லை என்பதையே காட்டுகிறது. ரஞ்சி கோப்பையின் முதல் சுற்றில் 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தபோதிலும், நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கும் முகமது ஷமி புறக்கணிக்கப்பட்டுள்ளார்.




ரவீந்திர ஜடேஜா
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான ஒருநாள் போட்டி அணியில் ரவீந்திர ஜடேஜா மீண்டும் சேர்க்கப்பட்டார். இந்நேரம் ஜடேஜாவின் உலகக் கோப்பை இடம் உறுதியாகிவிட்டது போலத் தோன்றியது. இருப்பினும், நமன் தீர் ஒரு சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக உருவெடுத்துள்ளார். இந்திய அணியின் இந்தத் தேர்வானது, ஒருநாள் போட்டி அணியில் ஜடேஜாவிற்குப் பதிலாக நமன் தீர் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதற்கான ஓர் அறிகுறியாகக் கருதப்படலாம்.
யுஸ்வேந்திர சாஹல்
சில நாட்களுக்கு முன்புதான், யுஸ்வேந்திர சாஹல் முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பை சாஹல் நிராகரிக்கவில்லை என்று கூறியுள்ளார். சாஹல் இந்திய அணிக்குத் திரும்பி அடுத்த உலகக் கோப்பையில் விளையாட விரும்புவது தெளிவாகத் தெரிகிறது. இந்தநிலையில், சாஹலும் இந்திய அணியில் இடம்பெறுவதற்கான சாத்தியம் இல்லை.
புவனேஷ்வர் குமார்
புவனேஷ்வர் குமார் டி20 அணிக்குத் திரும்பியுள்ளார், ஆனால் ஒருநாள் அணிக்கு புவனேஷ்வர் குமார் புறக்கணிக்கப்பட்டுள்ளார். டி20 போட்டிகளிலும் புவனேஷ்வருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஏனெனில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும், மீண்டும் ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறாமல் போகலாம்.
ALSO READ: நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கு பும்ரா வேண்டாம்.. பிசிசிஐ எடுக்கும் முக்கிய முடிவு!
நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஒருநாள் அணி (முதல் 3 ஒருநாள் போட்டிகள்):
சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், நமன் தீர், அன்ஷுல் கம்போஜ், குர்னூர் பிரார். சிங், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா*, குல்தீப் யாதவ்
இந்திய ஒருநாள் அணி (கடைசி 2 ஒருநாள் போட்டிகள்):
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி , திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர், துணை கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், நமன் தீர், ஆக்கிப் நபி, குர்னூர் பிரார், குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), முகமது சிராஜ், யாஷ் தாக்கூர், குல்தீப் யாதவ்.