IND vs NZ: நியூசிலாந்து தொடரில் ட்விஸ்ட்.. இந்திய ஒருநாள் அணிக்கு 2 கேப்டன்களை களமிறங்கிய பிசிசிஐ!
Indian Cricket Team Team: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), நியூசிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியை இன்று அதாவது 2026 அக்டோபர் 16ம் தேதி அறிவித்தது. இதில், ஒருநாள் அணிக்கு 2 கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), நியூசிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியை இன்று அதாவது 2026 அக்டோபர் 16ம் தேதி அறிவித்தது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 3 போட்டிகளுக்கு சுப்மன் கில்லும், மீதமுள்ள இரண்டு போட்டிகளுக்கு ஷ்ரேயாஸ் ஐயரும் அணிக்குத் தலைமை தாங்குவார்கள். அதேநேரத்தில், இந்திய டெஸ்ட் அணியை சுப்மன் கில் முழுவதுமாக வழிநடத்துவார்.
முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், நமன் தீர், அன்ஷுல் கம்போஜ், குர்னூர் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷான், குல்தீப் யாதவ்.
4வது மற்றும் 5வது போட்டிகளுக்கான இந்திய ஒருநாள் அணி
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி , திலக் வர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர், துணை கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், நமன் தீர், ஆக்கிப் நபி, குர்னூர் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், குமார் குஷாக்ரா குல்தீப் யாதவ்.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி
சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் (துணை கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்)*, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அன்ஷுல் கம்போஜ், ஜஸ்பிரித் பும்ரா , பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.