Team India: அணி தேர்வு முடிவில் ஹர்சித் ராணா.. சிக்கலை தரும் காயம்.. திணறும் தேர்வுக்குழு!
Harshit Rana Injury Status: நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் 2026 சுற்றுப்பயணம் அக்டோபர் 22ல் தொடங்குகிறது. 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கும். ஹர்ஷித் ராணா, இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக முக்கியத்துவம் வாய்ந்தவர். ஆனால் தொடர் காயம் காரணமாக அவரது உடற்தகுதி குறித்து தேர்வுக் குழு காத்திருக்கிறது.
இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் (IND vs NZ) வருகின்ற 2026 அக்டோபர் 22ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் போது இரு அணிகளும் 5 டி20 சர்வதேசப் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான அணிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. காயம் காரணமாக ஹர்ஷித் ராணா (Harshit Rana), ரிஷப் பண்ட் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் உடற்தகுதி குறித்த முடிவுக்கு தேர்வுக் குழு காத்திருக்கிறது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி 2026 நவம்பர் 4ம் தேதி நடைபெறும்.
ALSO READ: திரும்பிய ஃபின் ஆலன், லாக்கி ஃபெர்குசன்.. இந்தியாவிற்கு எதிரான NZ ஒருநாள் அணி அறிவிப்பு!
ஹர்ஷித் ராணாவுக்கு காத்திருக்கும் பிசிசிஐ:
கீழ் வரிசையில் சிறப்பாக பேட்டிங் செய்யும் திறனுடன் வேகப்பந்து வீச்சும் கொண்ட ஹர்ஷித் ராணா, இந்திய அணியில் ஒரு முக்கியப் பங்கை வகிப்பதற்காகத் தேர்வுக் குழுவின் திட்டங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ராணா ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு வடிவங்களுக்கும் பரிசீலிக்கப்பட்டு வருகிறார். இருப்பினும், காயம் காரணமாக ராணா தற்போது மறுவாழ்வு சிகிச்சையில் உள்ளார். அறிக்கையின்படி, தேர்வுக் குழுவும் அணி நிர்வாகமும் ஹர்ஷித் ராணாவை இரண்டு வடிவங்களிலும் அணியில் சேர்க்க ஆர்வமாக இருப்பதாக பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது. ராணா எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்யக்கூடிய ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராகக் கருதப்படுகிறார்.




அடிக்கடி காயத்தில் சிக்கும் ஹர்ஷித் ராணா:
24 வயதான ஹர்ஷித் ராணா சமீப காலமாக காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டம் ஒன்றில் ராணா காயமடைந்தார். இதன் காரணமாக, அவரால் உலகக் கோப்பையில் விளையாட முடியவில்லை. அதுமட்டுமின்றி, ஐபிஎல் 2026 தொடரிலும் அவரால் பங்கேற்க முடியவில்லை. ஐபிஎல் தொடருக்குப் பிறகு, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களில் ஹர்ஷித் ராணா ஐந்து போட்டிகளில் விளையாடினார். இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவருக்குத் தொடைத்தசைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அன்று முதல், ராணா 2026 ஜூலை மாதம் முதல் களத்தில் இருந்து விலகியுள்ளார்.
ALSO READ: முகமது ஷமி மீது அதிக எதிர்பார்ப்பு.. நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் இடமா?
கடந்த 2026 செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கு ராணா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் ராணா சேர்க்கப்பட்டிருந்தார். இருப்பினும், காயத்திலிருந்து மீண்டு வரும் பயிற்சியின் போது அவருக்கு மீண்டும் ஒரு காயம் ஏற்பட்டது. கடந்த 2026 செப்டம்பர் 7ம் தேதி நடந்த ஒரு பயிற்சிப் போட்டியில் பந்துவீசியபோது, அவரது தொடைத் தசைகளில் சுளுக்கு ஏற்பட்டது. இது அவரது மீள்வருகை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஹர்ஷித் ராணாவின் சர்வதேச வாழ்க்கை
ஹர்ஷித் ராணா இதுவரை இந்தியாவுக்காக 2 டெஸ்ட் போட்டிகளில் 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ராணா 14 ஒருநாள் போட்டிகளில் 26 விக்கெட்டுகளையும், 14 டி20 போட்டிகளில் 16 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். தற்போது, நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்குள் ராணா உடற்தகுதியுடன் இருக்கிறாரா என்பதைத் தேர்வுக் குழு கவனிக்கும். அவரது உடற்தகுதி குறித்துத் தெளிவு கிடைத்த பின்னரே, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் தேர்வு குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.