AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கு 2 அணிகள்.. பிசிசிஐ திட்டம் என்ன..?

India vs New Zealand Tour: இந்திய அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் 2026 அக்டோபர் 22ல் தொடங்குகிறது. டி20 அணி அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. டெஸ்ட் தொடருக்கு முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்க, இரண்டு தனித்தனி ஒருநாள் அணிகள் தேர்வு செய்யப்படலாம். இந்தியா 'ஏ' தொடரின் முடிவுகள், இரண்டாவது ஒருநாள் அணித் தேர்வில் முக்கியப் பங்காற்றும்.

IND vs NZ: நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கு 2 அணிகள்.. பிசிசிஐ திட்டம் என்ன..?
இந்திய அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 09 Oct 2026 16:56 PM IST

இந்திய அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் (IND vs NZ) விரைவில் தொடங்க உள்ளது. 2020ம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி (Indian Cricket Team) அனைத்து வடிவ தொடருக்காக நியூசிலாந்து செல்வது இதுவே முதல் முறை. இதனால், இந்த சுற்றுப்பயணம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சுற்றுப்பயணம் ஒரு டி20 தொடருடன் தொடங்கும், ஆனால் மிக முக்கியமானதும், அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியதும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் மீதே இருக்கும். டி20 தொடருக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகள் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தகவல்களின்படி, வருகின்ற 2026 அக்டோபர் 11ம் தேதிக்குப் பிறகு அணித் தேர்வு நடைபெறும் என்றும், இரண்டு தனித்தனி ஒருநாள் அணிகள் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ALSO READ: 4 ஆண்டுகளுக்குப் பிறகு! இந்திய அணிக்குள் புவனேஷ்வர்.. எதிர்பார்ப்பில் NZ தொடர்!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 2 அணிகள்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வருகின்ற 2026 அக்டோபர் 22ம் தேதி முதல் தொடங்குகிறது. இதன் மூலம், நியூசிலாந்துக்கான இந்தியாவின் 40 நாள் சுற்றுப்பயணம் ஆரம்பமாகிறது. 5 டி20 போட்டிகளை தொடர்ந்து, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெறும். டி20 தொடருக்கான அணி ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகள் விரைவில் தேர்ந்தெடுக்கப்படும். ஒருநாள் அணியைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கு, இந்தியா ‘ஏ’ மற்றும் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் தொடரும் ஒரு காரணம் என தெரிகிறது.

டெஸ்ட் தொடருக்காக சில அனுபவ வீரர்களுக்கு ஓய்வு:

அதாவது, ஒருநாள் தொடருக்காக இரண்டு தனித்தனி அணிகளைத் தேர்வு செய்வது குறித்து தேர்வுக் குழு பரிசீலித்து வருகிறது. ஒருநாள் தொடருக்கும் டெஸ்ட் தொடருக்கும் இடையே 4 நாட்கள் மட்டுமே இடைவெளி இருப்பதால், டெஸ்ட் தொடருக்குத் தயாராவதற்காக கேப்டன் சுப்மன் கில் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்களுக்கு கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வளிக்கலாம்.

ALSO READ: தேர்வு கூட்டங்களில் VVS லட்சுமண் கலந்து கொண்டது ஏன்..? பிசிசிஐ விளக்கம்!

இந்தியா ஏ போட்டி தொடர் முடிவதற்காக காத்திருப்பு:

இதனால்தான் தேர்வாளர்கள் ஒருநாள் தொடருக்காக இரண்டு அணிகளைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. மேலும் இந்த முடிவில் தற்போதைய இந்தியா ‘ஏ’ தொடர் முக்கியப் பங்கு வகிக்கும். தேர்வுக் குழு இந்தத் தொடரில் பங்கேற்கும் வீரர்களைக் கூர்ந்து கவனித்து வருகிறது. மேலும் அவர்களில் சிலர், கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் களமிறங்கும் இந்த இரண்டாவது அணியில் சேர்க்கப்படுவார்கள். அதன்படி, இந்த அணியில் ருதுராஜ் கெய்க்வாட், சூர்யான்ஷ் ஷெட்ஜ், ரஜத் பதிதார், யாஷ் தாக்கூர் மற்றும் விப்ராஜ் நிகம் போன்ற வீரர்கள் இடம்பெறலாம்.

Follow Us