Team India: தேர்வு கூட்டங்களில் VVS லட்சுமண் கலந்து கொண்டது ஏன்..? பிசிசிஐ விளக்கம்!
Player Fitness First: இந்திய அணியின் தேர்வுக் கூட்டங்களில் இனி சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (COE) தலைவர் வி.வி.எஸ். லட்சுமண் கட்டாயம் கலந்துகொள்வார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. வீரர்களின் காயங்கள் மற்றும் உடற்தகுதி குறித்து முழுமையாக அறிந்த லட்சுமண் பங்கேற்பது, தேர்வுக் குழுவுக்கும் சிறப்பு நிர்வாகக் குழுவுக்கும் இடையே உள்ள தவறான புரிதல்களைத் தவிர்க்க உதவும். இது இந்திய அணியின் தேர்வு செயல்முறையை மேம்படுத்தும் முக்கிய முடிவாகும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (COE) அமைப்பின் தலைவர் வி.வி.எஸ். லட்சுமண், இனி இந்திய அணியின் தேர்வுக் கூட்டங்களில் கலந்துகொள்வார் என்று பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சாய்கியா உறுதிப்படுத்தினார். கடந்த 2026 செப்டம்பர் மாதம் மும்பையில் உள்ள தலைமையகத்தில் நடைபெற்ற விரிவான ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக, இந்திய அணியின் (Indian Cricket Team) தலைமைத் தேர்வாளராக இருந்த அஜித் அகர்கரின் பதவிக்காலம் கடந்த 2026 அக்டோபர் 4ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
ALSO READ: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது டி20 போட்டி எப்போது? முழு விவரம் இதோ!
தேர்வுக்குழு கூட்டத்தின்போது விவிஎஸ் லட்சுமண் கட்டாயம்:
நேற்று அதாவது 2026 அக்டோபர் 6ம் தேதி மாலை, கவுகாத்தியில் உள்ள ஏசிஏ மைதானத்தில் நடைபெற்ற மூத்த ஆண்கள் அணி தேர்வுக் கூட்டத்தில் லட்சுமணன் கலந்துகொண்ட புகைப்படத்தை பிசிசிஐ தனது ‘X’ சமூக வலைதளத்தில் பகிர்ந்தது. இக்கூட்டத்தில், சீனியர் ஆண்கள் தேர்வுக் குழு உறுப்பினர்களான பிரக்யான் ஓஜா, எஸ்.எஸ். தாஸ், அஜய் ராத்ரா மற்றும் ஆர்.பி. சிங் ஆகியோருடன் பிசிசிஐ செயலாளர் சாய்கியாவும் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து, நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேசத் தொடர் மற்றும் நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ‘ஏ’ வகை தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்தனர்.




அணியைத் தேர்வு செய்யும் போது தேர்வாளர்களுக்கும் சிறப்பு நிர்வாகக் குழுவிற்கும் (CoE) இடையே எந்தவிதமான தவறான புரிதலும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, விவிஎஸ் லட்சுமண் நேற்று அதாவது 2026 அக்டோபர் 6ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். அவர் பெங்களூருவில் உள்ள பிசிசி சிறப்பு நிர்வாகக் குழுவின் கிரிக்கெட் தலைவராக உள்ளார், மேலும் இனிமேல் நடைபெறும் அனைத்து மூத்த ஆண்கள் அணி தேர்வுக் கூட்டங்களிலும் விவிஎஸ் லட்சுமண் கலந்துகொள்வார். வீரர்களின் காயங்கள் குறித்து விவிஎஸ் லட்சுமண் முழுமையாக அறிந்திருக்கிறார். மேலும், எந்தவிதமான தவறான புரிதலையும் தவிர்ப்பதற்காக, இனிவரும் ஆண்கள் அணி தேர்வுக் கூட்டங்களில் லட்சுமண் கலந்துகொள்ள வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ALSO READ: 4 ஆண்டுகளுக்குப் பிறகு! இந்திய அணிக்குள் புவனேஷ்வர்.. எதிர்பார்ப்பில் NZ தொடர்!
லட்சுமண் பங்கேற்பு:
இது தொடர்பாக பிசிசி செயலாளர் தேவாஜித் சாய்கியா கூறுகையில், “சீனியர் ஆண்கள் தேசிய தேர்வுக் குழுவின் கூட்டங்களில் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் தலைவர் விவிஎஸ் லட்சுமணனின் பங்கேற்பு இனி ஒரு வழக்கமாக மாறும் என்று தெரிவித்தார்.
சமீப காலங்களில், இந்திய வீரர்களின் கிடைப்புத்தன்மைப் பிரச்சினைகளால் ஆடவர் அணிகளுக்கான தேர்வு செயல்முறை சில சமயங்களில் தடைபட்டுள்ளது. சில சமயங்களில், வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டாலும், சுற்றுப்பயணத்திற்கு முன்பு முழு உடற்தகுதியை அடைய முடியாததால் பின்னர் நீக்கப்பட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, பிசிசிஐ தற்போது இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.