AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

NZ ODI Squad vs India: திரும்பிய ஃபின் ஆலன், லாக்கி ஃபெர்குசன்.. இந்தியாவிற்கு எதிரான NZ ஒருநாள் அணி அறிவிப்பு!

New Zealand Announces India ODI Squad: இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. ஃபின் ஆலன், லாக்கி ஃபெர்குசன், டிம் சீஃபர்ட் ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளனர். தோள்பட்டை காயம் இருந்தும் ரச்சின் ரவீந்திரா முதல் 3 போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்து இரண்டு வெவ்வேறு அணிகளை அறிவித்துள்ளது; மிட்செல் சான்ட்னர் கேப்டனாக செயல்படுவார்.

NZ ODI Squad vs India: திரும்பிய ஃபின் ஆலன், லாக்கி ஃபெர்குசன்.. இந்தியாவிற்கு எதிரான NZ ஒருநாள் அணி அறிவிப்பு!
இந்தியா - நியூசிலாந்து ஒருநாள் தொடர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Oct 2026 17:11 PM IST

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், இந்தியாவுக்கு (Indian Cricket Team) எதிரான வரவிருக்கும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியை (IND vs NZ) இன்று அதாவது 2026 அக்டோபர் 11ம் தேதி அறிவித்தது. பில் ஆலன், லாக்கி பெர்குசன் மற்றும் டிம் சீஃபர்ட் ஆகிய 3 முக்கிய வீரர்கள் அணிக்குத் திரும்பியுள்ளனர். சமீபத்தில் தோள்பட்டையில் காயம் அடைந்த ரச்சின் ரவீந்திராவும் (Rachin Ravindra) முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவரால் டி20 தொடரில் விளையாட முடியாது.

ALSO READ: முகமது ஷமி மீது அதிக எதிர்பார்ப்பு.. நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் இடமா?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகின்ற 2026 நவம்பர் 4ம் தேதி தொடங்குகிறது. குறிப்பிடத்தக்க வகையில், நியூசிலாந்து முதல் 3 போட்டிகளுக்கும் கடைசி 2 போட்டிகளுக்கும் 2 வெவ்வேறு அணிகளை அறிவித்துள்ளது. நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு தலைமை தாங்குகிறார். இதில், 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் மேலும் 7 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

3 முக்கிய வீரர்களின் வருகை

ஃபில் ஆலன் மற்றும் லாக்கி ஃபெர்குசன் ஆகியோர் 2023ம் ஆண்டில் தங்களது கடைசி ஒருநாள் போட்டிகளில் விளையாடினர். ஃபெர்குசனின் கடைசி ஒருநாள் போட்டி, மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக அமைந்தது . அதேசமயம், டிம் சீஃபர்ட் தனது கடைசி ஒருநாள் போட்டியை, கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் விளையாடினார்.

தோள்பட்டை காயம் காரணமாக டி20 சர்வதேசத் தொடரிலிருந்து விலக்கப்பட்டிருந்த ரச்சின் ரவீந்திராவுக்கு, முதல் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2026 ஜனவரியில் இந்தியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருநாள் தொடரை வென்ற நியூசிலாந்து அணியில் இருந்த பெரும்பாலான வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். அப்போது, ​​இந்திய மண்ணில் முதன்முறையாக இந்தியாவுக்கு எதிராக இருதரப்பு ஒருநாள் தொடரை வென்ற சாதனையை நியூசிலாந்து நிகழ்த்தியது.

காயங்கள் காரணமாக சில வீரர்களுக்கு இடம் இல்லை..

நியூசிலாந்தின் சில முக்கிய வீரர்கள் இன்னும் காயங்களிலிருந்து மீண்டு வருகின்றனர். ஜாக் ஃபௌல்க்ஸ் (இடுப்புத் தசை), வில் ஓ’ரூர்க் மற்றும் பென் சியர்ஸ் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு வரும் சிகிச்சை காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

ALSO READ: நியூசிலாந்து டூர்.. இந்திய அணியில் இடம்பெறப்போவது யார்? தேர்வாளர்கள் பிளான் என்ன?

முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி

மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி, மாட் ஹென்றி, கைல் ஜேமிசன், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், வில் யங், பிளேயர் டிக்னர்

4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி

மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், கிறிஸ்டியன் கிளார்க், ஜேக்கப் டஃபி, மாட் ஃபிஷர், லாக்கி ஃபெர்குசன், மிட்ச் ஹே (விக்கெட் கீப்பர்), நிக் கெல்லி, டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), பிளேயர் டிக்னர், வில் யங்

Follow Us