AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs WI T20: 249 ரன்கள் அடித்தும் இந்தியா தோல்வி.. காரணத்தை விளக்கிய காம்பீர்!

Gautam Gambhir Statement: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ஏற்பட்ட தோல்வி குறித்து பயிற்சியாளர் கௌதம் காம்பீர் பேசியுள்ளார். கிரிக்கெட்டில் பேட்டிற்கும் பந்திற்கும் இடையே சமநிலை அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார். பனிப்பொழிவு போன்ற சவாலான சூழ்நிலைகளில் பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை சுட்டிக்காட்டிய காம்பீர், மயங்க் யாதவின் வேகப்பந்துவீச்சை வெகுவாகப் பாராட்டினார்.

IND vs WI T20: 249 ரன்கள் அடித்தும் இந்தியா தோல்வி.. காரணத்தை விளக்கிய காம்பீர்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் காம்பீர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Oct 2026 18:53 PM IST

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு (IND vs WI) இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 2 போட்டிகள் இதுவரை நடைபெற்றுள்ளன. முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றன. 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி (Indian Cricket Team) வெஸ்ட் இண்டீஸ் அணி 250 ரன்கள் இலக்கை நிர்ணயித்திருந்தது, இந்த மிகப்பெரிய இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 18.3 ஓவர்களில் துரத்தி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து,  இந்தியா தோல்வியைச் சந்தித்த பிறகு பயிற்சியாளர் கௌதம் காம்பீர் என்ன பேசினார் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பந்துவீச்சில் சொதப்பல்.. இந்திய அணியில் மாற்றமா..? பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

பயிற்சியாளர் கௌதம் காம்பீர் கூறியது என்ன?

ராஞ்சியில் நடந்த டி20 போட்டிக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்தித்த கௌதம் கம்பீர் கூறுகையில், “கிரிக்கெட்டில் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் அடிப்பது மட்டும் முக்கியமல்ல. ஆட்டத்தை மேம்படுத்த, பேட்டிற்கும் பந்திற்கும் இடையே சமமான போட்டி இருக்க வேண்டும். பேட்டிற்கும் பந்திற்கும் இடையே ஒரு நல்ல போட்டியை நீங்கள் விரும்பவில்லையா? நீங்கள் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் மட்டுமே பார்க்க விரும்பினால், நாங்கள் அதைக் காட்டுவோம். ஆனால், பேட்டிற்கும் பந்திற்கும் இடையே ஒரு நல்ல போட்டியை நீங்கள் பார்க்க விரும்பினால், நாங்கள் அதையும் காட்ட தயார்.

இங்கு பந்துவீச்சாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இந்தப் பந்துவீச்சாளர்கள் நம்முடையவர்கள். பேட்டிங்கும் பந்துவீச்சுக்கும் இடையிலான  சமனில் இருந்தால், அது நன்றாக இருக்கும். மேலும், நாம் ஒரு சிறந்த கிரிக்கெட்டையும் காண முடியும்” என்று கூறினார்.

தொடர்ந்து பந்துவீச்சு குறித்து பேசிய கௌதம் காம்பீர், “இதுபோன்ற சூழ்நிலைகளில் பந்துவீசுவது கடினம். பனிப்பொழிவு உள்ள ப்ளாட் பிட்ச்களில் பந்துவீசுவது சவாலானது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், குறிப்பாக முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளையும், முதல் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளையும் இழந்த எதிரணியைத் தடுக்க நாம் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறினார்.

ALSO READ: டி20யில் 250 ரன்களும் எளிது.. இந்திய பந்துவீச்சை சுக்குநூறாக்கிய வெஸ்ட் இண்டீஸ்!

மயங்க் யாதவை பாராட்டிய காம்பீர்:

இந்தியாவுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை அளித்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவையும் பாராட்டிய கௌதம் காம்பீர், “மயங்க் யாதவ் மணிக்கு 145 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் பந்து வீசி, ரோவ்மன் பவலை மணிக்கு 149.5 கி.மீ. வேகத்தில் ஆட்டமிழக்கச் செய்தார். அவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர், அவர் அப்படித்தான் பந்து வீச வேண்டும். அவர் ஒரு மெதுவான பந்து வீச்சாளர் அல்ல. உங்களால் 150 கி.மீ. வேகத்தில் பந்து வீச முடிந்தால், 150 கி.மீ. வேகத்தில் வீசுங்கள். உங்களால் 120 கி.மீ. வேகத்தில் பந்து வீச முடிந்தால், 120 கி.மீ. வேகத்தில் வீசுங்கள். எனவே, நீங்கள் ஒரு வேகப்பந்து வீச்சாளராக விளையாடும்போது, ​​ஒரு வேகப்பந்து வீச்சாளரைப் போல பந்து வீசுவது உங்கள் பொறுப்பு. அதைத்தான் அவர் இன்று செய்தார், அதனால்தான் அவர் வெற்றி பெற்றார்” என்று கூறினார்.

Follow Us