AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs WI: டி20யில் 250 ரன்களும் எளிது.. இந்திய பந்துவீச்சை சுக்குநூறாக்கிய வெஸ்ட் இண்டீஸ்!

IND vs WI 2nd T20: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையேயான 2வது டி20 போட்டியானது இன்று அதாவது 2026 அக்டோபர் 9ம் தேதி ராஞ்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களில் துரத்தி வெற்றி பெற்றது.

IND vs WI: டி20யில் 250 ரன்களும் எளிது.. இந்திய பந்துவீச்சை சுக்குநூறாக்கிய வெஸ்ட் இண்டீஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்Image Source: bcci and wi/ twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 09 Oct 2026 23:17 PM IST

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு (IND vs WI) இடையேயான 2வது டி20 போட்டியானது இன்று அதாவது 2026 அக்டோபர் 9ம் தேதி ராஞ்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி (Indian Cricket Team) 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களில் துரத்தி வெற்றி பெற்றது. இந்திய அணி ஆரம்பத்தில் 249 ரன்கள் எடுத்ததால் எளிதாக வெற்றி பெறும் என அனைவரும் நினைத்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் சதம் அடித்து வெற்றியை பரிசாக தூக்கினார். இது டி20 வரலாற்றில் 2வது மிகப்பெரிய சேஸாக அமைந்தது.

ALSO READ: காத்திருந்த ரன் எண்ணிக்கை.. 21 பந்துகளில் அரைசதம் கடந்த சஞ்சு சாம்சன்!

250 ரன்களை எளிதாக விரட்டிய வெஸ்ட் இண்டீஸ்:


249 ரன்களை துரத்த வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியபோது மயங்க் யாதவ் தனது வேகத்தால் அடுத்தடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி முதல் ஓவரிலேயே அசத்தினார். இருப்பினும், வெஸ்ட் அணியின் மற்றும் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் எளிதாக எட்டி பிடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப்பைத் தவிர, ஷெர்ஃபான் ரதர்ஃபோர்டும் 37 பந்துகளில் 84 ரன்கள் குவித்து இந்திய பந்துவீச்சாளர்களை பந்துவீச்சை சிதைத்தார்.  இரண்டாவது இன்னிங்ஸில் பனி ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுதான், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு சாதகமாக அமைந்தது. இந்திய பந்துவீச்சை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர்களான அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் தங்களது 4 ஓவர்களில் 50 ரன்களுக்கு மேல் விட்டு கொடுத்தனர். இதில், அக்சர் படேல் 3.3 ஓவர்களில் 63 ரன்களையும், குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 53 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர்.

நமன் தீர் முதல் சிவம் துபே, அர்ஷ்தீப் சிங் மற்றும் மயங்க் யாதவ் என மற்ற இந்திய பந்துவீச்சாளர்களின் எகானமி ரேட்டும் 11-க்கும் அதிகமாக இருந்தது.

ALSO READ: சரவெடியாய் சம்பவம் செய்த சாம்சன்.. 249 ரன்கள் குவித்த இந்திய அணி!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணியின் அடுத்த டி20 போட்டி எப்போது..?

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான டி20 தொடர், இரண்டு போட்டிகளுக்குப் பிறகு 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்தத் தொடரில் இன்னும் மூன்று போட்டிகள் மீதமுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான அடுத்த டி20 போட்டி வருகின்ற 2026 அக்டோபர் 11ம் தேதி இந்தூரில் நடைபெறும்.

Follow Us