AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs WI: காத்திருந்த ரன் எண்ணிக்கை.. 21 பந்துகளில் அரைசதம் கடந்த சஞ்சு சாம்சன்!

Sanju Samson Half-Century: ராஞ்சியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக அரைசதம் அடித்தார். இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் வெறும் 21 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். கடந்த சில இன்னிங்ஸ்களில் அவரது பேட்டிங் சிறப்பாக இல்லாத நிலையில், அவரது செயல்பாடு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதாலும், இந்த இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானதாக இருந்தது.

IND vs WI: காத்திருந்த ரன் எண்ணிக்கை.. 21 பந்துகளில் அரைசதம் கடந்த சஞ்சு சாம்சன்!
Sanju Hc
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 09 Oct 2026 20:34 PM IST

ராஞ்சியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான (IND vs WI) இரண்டாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக அரைசதம் அடித்தார். இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் வெறும் 21 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். கடந்த சில இன்னிங்ஸ்களில் அவரது பேட்டிங் சிறப்பாக இல்லாத நிலையில், அவரது செயல்பாடு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டதாலும், இந்த இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானதாக இருந்தது. ராஞ்சியில் சஞ்சு சாம்சனின் (Sanju Samson) இன்னிங்ஸ் 6 ரன்களில் முடிவுக்கு வந்திருக்கும். அப்போது, பூரன் ஒரு எளிதான கேட்சைத் தவறவிட்டதால், அந்த இந்திய பேட்ஸ்மேனுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

ALSO READ: வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2வது டி20: சஞ்சு சாம்சனுக்கு சிக்கலா? வெளியான தகவல்

2 முறை கிடைத்த அதிர்ஷ்டம்:


ராஞ்சியில் உள்ள ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஆடும் லெவனில் வைபவ் சூர்யவன்ஷி வாய்ப்பு வழங்கபடாத நிலையில், மீண்டும் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் களமிறங்கினார். இரண்டாவது ஓவரில் மயிரிழையில் ஆட்டமிழப்பிலிருந்து தப்பித்த சஞ்சுவின் மீது அனைவரின் பார்வையும் இருந்தது. அகில் ஹுசைனின் பந்தை அடிக்க முயன்று, அதை ஆஃப்சைடில் அடிக்க முயன்றார். ஆனால் அது நேராக கமில் பூரனிடம் சென்றது. பூரன் எளிதாகப் பந்தைப் பிடித்திருக்கலாம், ஆனால் அவர் அதைக் கோட்டைவிட்டார். இரண்டாவது முயற்சியிலும் அவரால் அதைப் பிடித்திருக்க முடியும், ஆனால் இன்று அதிர்ஷ்டம் சஞ்சுவின் பக்கம் இருந்தது போல் தோன்றியது.

சஞ்சு சாம்சன் 21 பந்துகளில் அரைசதம்:

பின்னர் அகீல் ஹொசைன் வீசிய ஐந்தாவது ஓவரில் சாம்சன் இரண்டு சிக்ஸர்களையும் இரண்டு பவுண்டரிகளையும் விளாசினார். அந்த ஓவரில் அவர் 22 ரன்கள் எடுத்தார். கடைசி பவர்பிளே ஓவரின் ஐந்தாவது பந்தில் சஞ்சு ஒரு பவுண்டரி அடித்து 48 ரன்களை எட்டினார். அதைத் தொடர்ந்து அடுத்த பந்தில் ஒரு பவுண்டரி அடித்து, 21 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார்.

ALSO READ: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச முடிவு.. இந்திய அணியில் மாற்றமா?

ராஞ்சியில் நடந்த போட்டியில், சஞ்சு சாம்சன் பவர்பிளேயில் மட்டும் 52 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு ஒரு வலுவான தொடக்கத்தை அளித்தார். இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 41 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்ஸர்கள் உதவியுடன் 82 ரன்கள் எடுத்து ஸ்பிரிங்கர் பந்துவீச்சில் மீண்டும் பூரனிடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Follow Us