IND vs NZ: நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கு பும்ரா வேண்டாம்.. பிசிசிஐ எடுக்கும் முக்கிய முடிவு!
Jasprit Bumrah to Miss NZ ODIs: ஜஸ்பிரித் பும்ரா நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார். பணிச்சுமை மேலாண்மை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பும்ரா முழு உடற்தகுதியுடன் இருந்தாலும், 2026 நவம்பர் 19 அன்று தொடங்கும் டெஸ்ட் தொடருக்காக அவர் காத்திருக்கிறார். இந்தியா 'ஏ' அணிக்காக விளையாடி டெஸ்ட் போட்டிக்கு தயாராகிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் (IND vs NZ) ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் வருகின்ற 2026 நவம்பர் 4ம் தேதி தொடங்குகிறது. ஆனால் பணிச்சுமை மேலாண்மை காரணமாக, பும்ரா இந்தத் தொடரில் விளையாட மாட்டார். ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) முழு உடற்தகுதியுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், வருகின்ற 2026 நவம்பர் 19ம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடருக்காக பும்ராவை அணியில் சேர்க்க இந்திய அணியின் தேர்வுக்குழு விரும்புகிறது.
ALSO READ: அணி தேர்வு முடிவில் ஹர்சித் ராணா.. சிக்கலை தரும் காயம்.. திணறும் தேர்வுக்குழு!
பும்ரா கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை. டைம்ஸ் ஆஃப் இந்தியா தகவலின்படி, வருகின்ற 2026 நவம்பர் 4 முதல் 15 வரை நடைபெறும் ஒருநாள் தொடரில் பும்ரா விளையாட மாட்டார். ஆனால், 2026 நவம்பர் 19ம் தேதி இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு நடைபெறும் மூன்றாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் பும்ரா இந்தியா ‘ஏ’ அணிக்காக விளையாட வாய்ப்புள்ளது. இந்தியா ‘ஏ’ மற்றும் நியூசிலாந்து ‘ஏ’ அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் வருகின்ற 2026 அக்டோபர் 24ம் தேதி தொடங்குகிறது. வருகின்ற 2026 நவம்பர் 7 முதல் 10 வரை நடைபெறும் 3வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாட வாய்ப்புள்ளது.




கண்காணிப்பில் பும்ரா:
பும்ரா, டெஸ்ட் அணிக்குத் திரும்புவதற்கான தனது ஆயத்தப் பணிகளை அகமதாபாத்தில் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பும்ரா இந்த 2026 அக்டோபர் மாத இறுதிக்குள் பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்தில் (Centre of Excellence) சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகள் நியூசிலாந்துக்குப் புறப்படும் நாள் வருகின்ற 2026 அக்டோபர் 28 ஆகும். இரு நாடுகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2026 அக்டோபர் 22ம் தேதி தொடங்குகிறது.
தற்போதைக்கு டெஸ்ட் போட்டிகளில் பும்ராவை விளையாட வைப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும், பும்ராவை முதலில் ஒருநாள் போட்டிகளிலும், பின்னர் உடனடியாக டெஸ்ட் தொடரிலும் விளையாட வைப்பது பிரச்சனை ஏற்படுத்தும் என்பதால், காயத்திலிருந்து மீண்டு வந்த பும்ராவை, டெஸ்ட் தொடரில் நேரடியாகக் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ALSO READ: பும்ராவை கணிக்காத ஆர்சிபி.. 2014 ஐபிஎல் ஏலத்தில் நடந்த சம்பவம்.. பார்த்திவ் படேல் சொன்ன விஷயம்!
சமீபத்தில், நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முழங்கால் காயம் காரணமாக பும்ரா விளையாட முடியவில்லை. அவருக்குப் பதிலாக ஆகிப் நபி முதல் முறையாக இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிர்வாகம், நியூசிலாந்து தொடரை மட்டுமல்லாமல், வருகின்ற 2027ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் பரிசீலித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமையை நிர்வகிப்பது ஒரு முக்கிய அம்சமாக இருக்கும்.