IPL 2027: ஹர்திக் இணையும் அணி சென்னையா? ராஜஸ்தானா? அஸ்வின் கணிப்பு!
Hardik Pandya IPL Trade: ஹர்திக் பாண்ட்யா ஐபிஎல் பயணத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்டார். தற்போது, அவரது அணி மாற்றம் குறித்து யூகங்கள் கிளம்பியுள்ளன. எம்.எஸ்.தோனி அவரை சிஎஸ்கே-வில் சேருமாறு வற்புறுத்துவார் என்ற கூற்றை அஸ்வின் மறுத்தார்.
ஐபிஎல் 2027 சீசனுக்கான (IPL 2027) ஏலம் வருகின்ற 2026 டிசம்பர் 16ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து, ஹர்திக் பாண்ட்யா தனது ஐபிஎல் பயணத்தை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் (Mumbai Indians) தொடங்கி, பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஆனார். தனது முதல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பட்டத்தை வென்று கொடுத்த ஹர்திக் பாண்ட்யா, இரண்டாவது சீசனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 2023-ல், ஒரு பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பி, ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக கேப்டன் ஆனார். மும்பை அணி 2024-ல் 10வது இடத்தையும், 2025-ல் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியதுடன், கடந்த பதிப்பில் 9வது இடத்தையும் பிடித்தது. இந்தநிலையில், இதற்கிடையில், எந்தெந்த அணிகள் அவரை மாற்ற அதிக வாய்ப்புள்ளது என்பதை குறித்து முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார்.
என்டிடிவி-யின் அறிக்கை ஒன்றின்படி, எம்.எஸ். தோனியே ஹர்திக் பாண்டியாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேருமாறு வற்புறுத்துவார் என்ற யூகங்கள் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “எம்.எஸ்.தோனியே ஹர்திக் பாண்டியாவை சிஎஸ்கே-வில் சேருமாறு வற்புறுத்துவார் என்று கூறப்படுகிறது. அது நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே நான் நினைக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
ALSO READ: பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய ஜெயவர்தனே.. மாற்றத்தை எதிர்பார்க்கும் மும்பை இந்தியன்ஸ்!




ஹர்திக் பாண்ட்யா எந்த அணியில் சேரலாம்?
ஜாகீர் கான் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளதால், ஹர்திக் பாண்ட்யா பரிமாற்றத்தின் மூலம் சிஎஸ்கே அணியில் இணைவது சாத்தியமில்லை. ஏனெனில், ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தபோது, அவருக்கும் ஜாகீருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பேசிய அஸ்வின்,”நான் கேள்விப்பட்ட வரையில், ஹர்திக் பாண்ட்யாவை பரிமாற்றம் செய்வதற்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் முன்னணியில் உள்ளது” என்று கூறினார்.
எந்த அணியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால், யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே சிறிது காலத்திற்கு முன்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு முன்னேறவில்லை, தற்போது எந்தப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை.
ALSO READ: சீக்ரெட்டாக வெளியான ஐபிஎல் 2027 மினி ஏல தேதி.. பிசிசிஐ திட்டம் இதுதான்!
வர்த்தகத்தின் மூலம் ஹர்திக் பாண்ட்யாவை தங்கள் அணியில் சேர்ப்பதற்கான சாத்தியமான அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அஜிங்க்யா ரஹானேவின் ஓய்வைத் தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு புதிய கேப்டனைத் தேடி வருகிறது. ஐபிஎல் 2027-க்காக கேப்டன் ரிஷப் பண்ட் டெல்லிக்குத் திரும்பியுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் அவர் மீது ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.